ராகுல், பண்ட் இல்லை ; அடுத்த 3 – 4 ஆண்டுகளில் இவர் தான் இந்திய அணியை வழி நடத்துவார் – ஹர்பஜன் சிங் நம்பிக்கை

0
242
Rishabh Pant KL Rahul and Harbhajan Singh

முன்னாள் இந்திய நட்சத்திர ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், வருங்காலத்தில் இந்திய அணியை வழி நடத்தும் வீரர் குறித்து பேசியுள்ளார். அடுத்த 3 – 4 ஆண்டுகளில் ஹார்திக் பாண்டியா இந்திய அணிக் கேப்டனாக உயர்வார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தன்னுடைய மோசமான ஃபார்மால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் அவரின் இடத்தை வெங்கடேஷ் ஐயர் பிடித்தார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியும் இவரைத் தக்க வைக்க மறுத்தது.

2022 ஐபிஎலில் ஹார்திக் பாண்டியா :

மோசமான நிலையில் இருந்த பாண்டியா, சற்றுக் கலங்காமல் 2022 ஐபிஎல் தொடரில் தன் கம்பேக்கை அறிவித்து அனைவரது வாய்யையும் அடைத்தார். 14 இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்துள்ளார். பல மாதங்களாக பந்துவீசாமல் இருந்தவர் தற்போது அதையும் செய்து வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை இருப்பினும் அவர் பந்துவீச திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பெரிய நன்மை. பேட்டிங், பவுலிங் மட்டுமில்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தன் பொறுப்பை சிறப்பாக செய்துள்ளார். ஏலம் முடிவில் சற்று பலவீனமான அணியாக தான் அனைவரும் மதிபிட்டனர். ஆனால் நடந்தோ அதற்கு மாறாக. ஒருவரை மட்டும் நம்பாமல் அனைத்து வீரர்களும் இணைந்து விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளனர். இத்தகு அணியை வழி நடத்திய ஹார்திக் பாண்டியாவுக்கு பெரிய பாராட்டுகள்.

பாண்டியாவின் கேப்டன்சி திறனைப் பார்த்து வியந்த ஹர்பஜன் சிங் இதை கூறினார். “ இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் ஹார்திக் பாண்டியா லிமிட்டட் ஓவர் பார்மட்டில் இந்திய அணியை நிச்சயம் வழி நடத்துவார். ” என்றார். அதற்கான எல்லா திறனும் அவரிடம் உள்ளது. நடப்பு கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்குப் பின் அந்த இடத்தைப் பிடிக்க கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என ஒரு சில வீரர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களைத் தாண்டி சிறப்பாக செயல்பட்டு ஹார்திக் பாண்டியா அந்த இடத்தைப் பிடிப்பாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2022 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பையை உயர்த்தி, தன் கேப்டன்சி திறன் மேல் சந்தேகப்பட்டவர்கள் அனைவரையும் வியக்க வைக்க பாண்டியா காத்திருக்கிறார். மறுபக்கம் அதிக ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், அதிக விக்கெட்டுகளை எடுத்த சாஹல் மற்றும் சில மேட்ச் வின்னர்களை கொண்ட ராஜஸ்தான் அணி எதிரில் காத்திருக்கிறது. கோப்பைக்காக இரு இந்திய வீரர்கள் ஹார்திக் பாண்டியா & சாம்சன் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விறுவிறுப்பான 2022 ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.