ராகுல் டிராவிட் ஒன்டே, டெஸ்ட்-க்கு கோச் பண்ணட்டும், டி20-க்கு நெக்ராவை கோச்சா போடுங்க – ஹர்பஜன் சிங் பேட்டி!

0
835

டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இவரை நியமித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. ஆனால் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பேரதிர்ச்சி கொடுத்தது.

- Advertisement -

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருந்த இந்தியா, இப்படி அரையிறுதி போட்டியோடு வெளியேறியதால், ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பையும் விமர்சித்து இருக்கின்றனர். அத்துடன் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூட்டணி சுத்தமாக சரியில்லை. இதில் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் டி20 போட்டிகளின் பயிற்சியாளரை மாற்றிவிட்டு புதிய பயிற்சியாளராக ஆசிஸ் நெக்ராவை நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங். அவர் கூறுகையில்,

“டி20 போட்டிகளை பொருத்தவரை, மூத்த முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிப்பதை விட, அண்மையில் ஓய்வு பெற்றவர்களை நியமிக்க வேண்டும். அவர்கள்தான் புத்துணர்வுடன் இளம் வீரர்களை புரிந்து கொள்ளும் மனப்பான்மையுடன் இருப்பர். அந்த வகையில் ஆசிஸ் நெக்ரா இந்திய டி20 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க சரியான வீரராக இருப்பார்.

- Advertisement -

ஏனெனில் சமீபத்தில் பிரீமியர் லீக் கோப்பையை பெற்று தந்திருக்கிறார். அதுவும் தனது பயிற்சியாளர் பொறுப்பை எடுத்த முதல் தொடரில். ராகுல் டிராவிட் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருப்பது சரியாக இருக்கும்.” என்றார்.