பெயர்ஸ்டோ-வின் முக்கியமான கேட்சை மிஸ் செய்த ஹனுமா விஹாரி – வீடியோ இணைப்பு

0
200

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி தொடரை வென்று விடும். முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரண்களும் இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிசை தொடங்கியது . புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரண்களை அடித்தது.

378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.இதனை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 20 ஓவரிலேயே 107 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ரன் அவுட் மற்றும் புஜாரா அடுத்தடுத்து 2விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பாரிஸ்டோ இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.

- Advertisement -

தற்போது இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாரிஸ்டோ 14 ரன்கள் எடுத்திருந்தபோது, முகமது சிராஜ் வீசிய பந்தை பளார் என்ற அடிக்க நான்காவது ஸ்லிப்பில் நின்ற விகாரி கேட்சை கோட்டை விட்டார் .இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. தனக்கு கிடைத்த லைஃபை பயன்படுத்திக் கொண்ட பாரிஸ்டோ தற்போது ஆட்டம் இழக்காமல் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் பாரிஸ்டோ ஜோடி 150 ரன்கள் சேர்த்து விட்டது. தற்போது கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் இங்கிலாந்துக்கு 119 ரன்கள் அடித்தால் வெற்றி நிச்சயம். இதனால் ஆட்டம் தற்போது இங்கிலாந்து பக்கம் சென்று விட்டது.