சூப்பர் கிங்ஸ் அணியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்!

0
325
CSK

தற்பொழுது உலகம் முழுவதும் பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இதற்கான துவக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இருக்கிறது!

தற்பொழுது ஒரே நேரத்தில் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, யுஏஇ, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருவதே இதற்கு உதாரணம்!

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள ஆறு அணிகள், தற்போது சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கில் ஆறு அணிகளை வாங்கி பங்கு பெற்று வருகின்றன!

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான பிரபலமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜோபர்கனஸ் நகரை மையமாகக் கொண்ட ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கி இருக்கிறது.

இந்த அணியில் அதிக விலை கொடுத்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துவரும் இளம் இடது கை பேட்ஸ்மேனான ஹாரி புரூக்கை ஒப்பந்தம் செய்திருந்தது. அவர் பணி சுமையின் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எஞ்சியுள்ள ஆட்டங்களுக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேடை ஒப்பந்தம் செய்திருக்கிறது. எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் சூப்பர் கிங்ஸ் அணி உடன் இணைந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!