ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் அதிரடி வீரரை அணியில் சோர்த்துள்ள குஜராத் டைட்டன்ஸ்

0
1292
Jason Roy GT

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஓபனிங் வீரர் ஜேசன் ராய் இதுவரை மொத்தமாகவே அவர் 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.13 போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தமாக 329 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.90 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.01 ஆகும்.

2017ஆம் ஆண்டு குஜராத் அணியிலும், 2018ஆம் ஆண்டில் டெல்லி அணியிலும், 2021ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியிலும் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை குஜராத் அணி 2 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் எளிதாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பிய ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கான மாற்று வீரரை குஜராத் அணி நிர்வாகம் தேடி வந்தது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ்சை கைப்பற்றிய குஜராத் அணி

அவருக்கான மாற்று வீரர்களை தேடி வந்த குஜராத் அணி ஆப்கானிஸ்தானை சேர்ந்த அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ்சை தேர்ந்தெடுத்து அவரை கைப்பற்றியுள்ளது. இதுவரை 69 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 அரை சதங்கள் உட்பட மொத்தமாக 1620 ரன்கள் குவித்திருக்கிறார். டி20 போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 151.82 என்பது குறிப்பிடத்தக்கது.

20 வயதாகும் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்காக 6 போட்டிகளில் 139 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 180.51 என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அதிரடியாக விளையாடக் கூடிய ஆற்றல் பெற்றவர் ரஹ்மானுல்லா குர்பாஸ். எனவே நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு இவர் கூடுதல் பலத்தை சேர்ப்பார் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளது. குஜராத் அணி தன்னுடைய முதல் போட்டியில் லக்னோ அணியை சந்திக்க உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வருகிற மார்ச் 28ஆம் தேதியன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது