பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரழப்பு – அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

0
161

ஆஸ்திரேலிய அணி விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அவரது சொந்த மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள டவுன்ஸ்வில்லிக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்த போது கார் தடம்புரண்டதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்சின் பங்களிப்பு

1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். ஆஸ்திரேலிய அணிக்காக 1998 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1462 ரன்களும் 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5088 அணிகளும் 14 டி20 போட்டிகளில் விளையாடி 337 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ரேஜ் 40.61 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 24.8 ஆகும். அதேபோல ஒருநாள் போட்டிகளில் இவருடைய இவருடைய பேட்டிங் ஆவேரேஜ் 39.44 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 92.44 ஆகும். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவேரேஜ் 48.14 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 169.35 ஆகும்.

பேட்டிங் மற்றுமின்றி பந்துவீச்சிலும் 26 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்டுகள், 198 ஒருநாள் போட்டிகளில் 133 விக்கெட்டுகள், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவருடைய பந்துவீச்சு எக்கானமி டெஸ்ட் போட்டிகளில் 2.57 ஒருநாள் போட்டிகளில் 5.01 டி20 போட்டிகளில் 8.98 என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்சின் உன்னத ரெக்கார்டுகள்

ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் இவரது பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். ஒருநாள் போட்டிகளில் ஆறாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இவர் இருக்கிறார். (பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 143* ரன்கள் குவித்துள்ளார்)

2003 மட்டும் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றிய வருடங்களில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது. 2003ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 326 ரன்கள் குவித்திருக்கிறார். 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 189 ரன்கள் குவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர்களில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இவர் விளையாடி இருக்கிறார். 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய வருடத்தில் 8 இன்னிங்ஸ்களில் 249 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பந்துவீச்சில் அந்த சீசனில் 7 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் 36 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 974 ரன்கள் குவித்திருக்கிறார்.இவருடைய பேட்டிங் ஆவேரேஜ் 36.07 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.87 ஆகும். பேட்டிங்கை போல பந்துவீச்சிலும் 30 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியிருக்கிறார். பந்துவீச்சில் இவருடைய எக்கானமி 7.67 ஆகும்.

தற்பொழுது நாம் கீரோன் பொல்லார்ட் அன்ட்ரூ ரசல் மற்றும் கிறிஸ் கெயில் போன்ற பல அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்துக்கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டாயிரத்தில் அதிரடியாக விளையாடிய ஒரு உன்னத ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவருடைய ஆத்மா சாந்தியடைய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.