இங்கிலாந்து அணி அபார வெற்றி ; இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது!

0
2360
Ind vs Eng

எட்டாவது டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் அடிலைடு மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடந்தது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர். கடைசி 11 ஆட்டங்களில் இங்கு டாஸ் வென்ற அணி ஜெயிக்கவில்லை என்ற புள்ளி விபரம் இருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்திய அணிக்கு இந்த தொடர் முழுவதும் நல்ல துவக்கத்தைத் தராத இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த ஆட்டத்திலும் அதையே கடைப்பிடித்தார்கள். இந்த தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூரிய குமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 14 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து இணைந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் அடித்தார்கள். அரை சதம் அடித்ததும் விராட் கோலி ஆட்டம் இழக்க, களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை விளாசி இந்திய அணியை 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எட்ட வைத்தார்!

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தர களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறங்களிலும் சிதறடித்து இந்திய அணியில் இறுதிப்போட்டி கனவையும் சிதறடித்தனர்!

- Advertisement -

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற இருவரும் வெறும் 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றனர். டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு இது இரண்டாவது 10 விக்கெட் வித்தியாச தோல்வி ஆகும்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 49 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன்
80 ரன்களை குவித்தார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ் 47 பந்துகளில் நாலு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிறு 13-ஆம் தேதி மெல்போன் மைதானத்தில் நடக்க இருக்கிறது!