பாகிஸ்தான் ரசிகரை பங்கமாய் கலாய்த்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

0
1894
Ind vs Pak

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய மிகப்பெரிய போட்டி நடைபெற்றது!

இந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பான செயல்பாட்டால் ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் கிடைத்த முதல் வெற்றி இந்திய அணி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தந்த தீபாவளி பரிசாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியுடன் பெற்ற வெற்றி என்பதை விட, இந்தப் போட்டி நடந்து முடிந்த விதத்தால்தான் மிகச் சிறப்பு மிக்கதாக மாறியது. இந்தக் காரணத்தால்தான் இந்த போட்டியில் வெற்றிக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் பலரும் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த வெற்றியை ஏறக்குறைய தீபாவளிக்கு சமமாக கொண்டாடி வருகிறார்கள். பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தீபாவளி வாழ்த்துக்கள் கூறியதோடு, நேற்று நடந்த ஆட்டத்தில் கடைசி மூன்று ஓவர்களை இன்றும் திரும்ப பார்த்ததாக தெரிவித்தார்.

இதற்கு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியா பேட் செய்யும் முதல் மூன்று ஓவரை பாருங்கள் என்பதை, முதல் 3 ஓவர்களில் பாருங்கள் என்று குறிப்பிட்டார். அதாவது இந்தியா பேட் செய்யும் பொழுது முதல் 3 ஓவர்களில் திணறியதை பாருங்கள் என்பதை அப்படி கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சுந்தர் பிச்சை புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆட்டத்தின் முதலில் வீசிய 3 ஓவர்களை குறிப்பிட்டு மிகப் பிரமாதமான ஸ்பெல் என்று நகைச்சுவையாக அந்த பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி தந்துள்ளார்.