“கடவுளே இந்த பாகிஸ்தான் வீரரை பேயின் கண்களில் இருந்து காப்பாற்று” – பாகிஸ்தான் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்!

0
915
Pakistan

நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இருபத்திமூன்று ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி 6வது முறையாக ஆசிய கோப்பையை பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது!

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ராஜபக்சேவின் 45 பந்துகளுக்கு 71 ரன்கள் மூலம் 170 ரன்களை குவித்தது. ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான நிலைமையில் இலங்கை அணி இருந்தது. ஆனால் கேப்டன் பாபர் ஆஸமின் தவறான ஆட்ட அணுகுமுறையால் மற்றும் ராஜபக்சேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்த ரன்னுக்கு இலங்கை அணி முன்னேறியது.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் இந்த முறையும் ஏமாற்றினார். அவர் வெளியேற அடுத்து முகமது ரிஸ்வான் களத்தில் நின்று விளையாடினார். ஆனால் அவரது ஆட்டம் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி மடமடவென்று விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த ஆசியக் கோப்பை தொடர் முற்று முழுவதும் யாரது கணிப்பும் பலிக்காமல் தான் போய் உள்ளது. ஆசியக் கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று பலர் கணித்தார்கள். ஆனால் அது பொய்த்தது. அதேபோல் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அதிக ரன்களை குவிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் இது தான் மிக மோசமாக பொய்த்துப் போனது. இந்த தொடர் முழுக்க பாபர் மொத்தம் 68 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆசியக் கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி பேட்டிங் பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த பொழுது, அவருக்கு பாபர் ஆறுதல் கூறி நம்பிக்கையாக ட்விட் செய்திருந்தார். ஆனால் விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் ஒரு சதம் என மீண்டும் பார்ம்க்கு வந்துவிட்டார். ஆனால் ஆசிய கோப்பையில் பாபர் சிக்கிக் கொண்டார். ஆப்கானிஸ்தான் அணியுடன் சதம் அடித்த விராட் கோலி அதில் கடைசியாக 72 ரன்களை வெறும் 21பந்தில் அடித்தார். ஆனால் பாபர் இந்தத் தொடர் முழுவதும் அடித்த ரன்களே 68 தான் என்பது சோகம்!

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் கூறியிருப்பதாவது ” நான் முன்பே கூறி உள்ளதைப்போல அவர் ஆட்டம் இழக்கும் முறையைப் பார்க்கும் பொழுது, கிரிக்கெட்டில் ஆழமான புரிதல் உள்ளவர்கள், அது துரதிஷ்டவசமானது என்றும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும் புரிந்து கொள்வார்கள் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அவர் விளையாடும் விதம் மற்றும் பணி நெறிமுறைகள் பற்றி யாரும் விவாதிக்க தேவையில்லை. அவர் ஒரு உலகத்தரமான வீரர். அவரை கடவுள் பேயின் கண்களில் இருந்து காப்பாற்றட்டும் ” என்று மிக வித்தியாசமான முறையில் பாபர் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்!