ஸ்லிம் டிரிம்மான பசங்க வேணும்னா பேஷன் ஷோ போங்க – இந்தியத் தேர்வாளர்களை வெளுத்த கவாஸ்கர்!

0
388
Gavaskar

இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி போட்டியின் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்றால் மும்பை அணிக்காக விளையாடி வரும் வலது கை பேட்ஸ்மேன் சர்பராஸ் கான்தான் அது!

அவர் நடப்பு ரஞ்சி தொடரில் 556 ரன்களை ஆறு ஆட்டங்களில் அடித்திருக்கிறார். கடந்த இரண்டு ரஞ்சி சீசனில் 982, 928 என மிகப்பெரிய ரன்குவிப்பை நிகழ்த்தி இருக்கிறார். அதன் முறையே அவரது பேட்டிங் ஆவரேஜ் 122 மற்றும் 154!

அவர் இப்படி இமாலாய ரன் குவிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்க, அவரிடமும் வெளியிலும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு உறுதியாகிக் கொண்டிருப்பதாகவே நம்பிக்கை இருந்தது. கடந்த வருடத்தின் இறுதியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட்கள் விளையாடிய இந்திய அணியில் அவருக்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்று அதற்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேபோல் இந்தியா வரும் ஆஸ்திரேலியா நான்கு டெஸ்ட்கள் விளையாட இருக்கிறது. இதிலும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவர் வேதனையை வெளிப்படுத்தி இருந்ததோடு அடுத்து டெல்லிக்கு எதிராக நடக்கின்ற ரஞ்சி போட்டியில் சதம் அடித்து அசத்தினார்!

இவரை தேர்ந்தெடுக்காதது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது
” உங்களுக்கு ஸ்லிம் மற்றும் ட்ரிம்மான பிளேயர்கள் வேண்டுமென்றால் நீங்கள் பேஷன் ஷோவுக்குத்தான் போக வேண்டும். அங்கு சில மாடல்களை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் பேட் மற்றும் பந்தைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தலாம். ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல உங்களிடம் அனைத்து வடிவங்களுக்குமான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உடல் அளவை பார்த்து தீர்மானிக்காதீர்கள் அவர்களின் ரன் மற்றும் விக்கட்டுகளை பார்த்து வாய்ப்பை தீர்மானியுங்கள்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நீங்கள் உடற்தகுதியோடு இல்லையென்றால் எப்படி சதங்களாக அடிக்க முடியும்? முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டுக்கான பிட்னஸ்தான் முக்கியம். யோ யோ டெஸ்ட் மட்டுமே அளவுகோல் கிடையாது. அந்த நபர் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்க வேண்டும். அவர் பொருத்தமாக இருந்தால் அவர் யாராக இருந்தாலும் அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அவரது வாய்ப்பு மறுக்கப்பட கூடாது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!