லைட் எரிந்தால் அவுட் கொடுங்கப்பா; இந்திய முன்னாள் வீரர் குமுறல் – சர்ச்சை வீடியோ இணைப்பு!

0
2416
Indvsban

பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை முடித்துக் கொண்டு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என்று தீர்மானித்தது. இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேஎல் ராகுல் 22 ரன்கள், கில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு களம் கண்ட ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வழக்கம்போல் தேவையல்லாத ஒரு ஷாட் விளையாடி பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 112 ரன்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்து அப்பொழுது நெருக்கடியில் விழுந்தது.

இதற்கு அடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் இருவரும் இணைந்து 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள். துரதிஷ்டவசமாக புஜாரா கடைசி நேரத்தில் 90 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார்!

ஆனால் அதே சமயத்தில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஸ்ரேயாசுக்கு இருந்தது. வேகப்பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் போல்ட் ஆன ஸ்ரேயாசுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால் கிரிக்கெட் விதிப்படி அவருக்கு அவுட் தரப்படவில்லை. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

தற்பொழுது இது குறித்து ட்விட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா பந்து ஸ்டெம்பில் பட்டு லைட் எரிந்தால் அவுட் கொடுக்க வேண்டியதுதான் சரி என்று தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.

யாரும், எதுவும் ஸ்டெம்பை அசைக்காமல் பெய்ல்ஸ் நகராமல் லைட் எரியாது. இந்த லைட் முறை கொண்டு வந்ததே இதற்காகத்தான். ஆனாலும் கிரிக்கெட் விதியில் லைட் எரிவதை வைத்து அவுட் தர மாற்றம் கொண்டு வர தயங்குகிறது எம்சிசி.