2023 உலககோப்பையில் இவர் தான் இந்திய அணியின் ஓபனர் – முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி உறுதி!

0
121

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இவர்தான் இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தேர்வு குழுவின் முன்னாள் அதிகாரி சபா கரீம்.

இந்திய அணியின் துவக்க வீரராக வலம் வரும் இளம் வீரர் சுப்மன் கில், தற்போது மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு தகுதி பெற்று இருக்கிறார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பிடித்து வந்த இவர் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார் கில். அதன் பிறகு வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இருந்தது. மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர், 3 போட்டிகளில் 205 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு அரை சால்தங்களும் அடங்கும். அதிகபட்சமாக 98 ரன்கள் அடித்திருந்தார்.

தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் துவக்க வீரராக களமிறங்கி விக்கெட் இழக்காமல் அபாரமாக விளையாடினார். மிகச் சிறப்பாக விளையாடி வரும் இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடவைக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருகின்றனர். கூடுதல் துவக்க வீரராக கேஎல் ராகுலும் இருக்கிறார். இருப்பினும் சுப்மன் கில் நிச்சயம் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விளையாட வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு அதிகாரி சபா கரிம் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கரீம் கூறுகையில், “கேஎல் ராகுல் தற்போது துவக்க வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் துவக்க ஜோடியாக களமிறங்கினாலும் இவர்களுக்கு கூடுதல் ஆப்சன் ஆக அடுத்த இடத்தில் இருப்பது கில். ஏனெனில் கில் மற்றும் தவான் ஜோடி மிகச் சிறப்பாக தற்போது விளையாடி வருகிறது. அனுப வீரரை போல கில் விக்கெட் இழக்காமல் அபாரமாக விளையாடி வருகிறார். தவான் மனநிலையை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்.” என்றார்.

- Advertisement -

கில் மற்றும் தவான் ஜோடி ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 192 ரன்கள் குவித்தது. இதில் கில் 82 ரன்கள் அடித்தார். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற போட்டியில், இது இரண்டாவது அதிகபட்ச துவக்க பார்ட்னர்ஷிப்பாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணம் இந்த துவக்க ஜோடி ஆகையால் சபா கரிம் இத்தகைய கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.