கில் 70! ரோஹித் 83! விராட் கோலி 113!- இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி!

0
858

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது .

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா தனது 47 வது அரை சதத்தை பதிவு செய்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய சுப்மன் கில் தனது ஒரு நாள் போட்டியின் ஐந்தாவது அரை சதத்தை பதிவு செய்தார் . இருவரும் முதலாவது விக்கெட் 147 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் 70 ரண்களில் சனக்கா பந்துவீச்சில் lpw ஆகி அவுட் ஆனார். பின்னர் ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர உதவினர் . சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மதுசங்க்கா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி 83 ரன்களில் ஆட்டம் இழந்தார் இதில் மூன்று சிக்ஸர்களும் ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்ததாக ஆட்ட வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக சில சிக்ஸர்களை அடித்தாலும் 28 ரண்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே எல் ராகுல் . இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி இந்திய அணியின் இலக்கை 300 ரண்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர். கேஎல் ராகுல் ஒருபுறம் கம்பெனி கொடுக்க மறுபுறம் அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது அரை சதத்தை கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். கேஎல் ராகுல் 39 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . அவரைத் தொடர்ந்து ஆட வந்த ஹர்திக் பாண்டியாவும் 14 ரண்களில் அவுட் ஆனார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக ஆடி ஒரு நாள் போட்டிகளில் தனது 45 வது சதத்தை பதிவு செய்தார். அருமையாக ஆடிய விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்களை எடுத்து ரஜிதா பந்துவீச்சில் குசால் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் ரஜிதா 88/3 விக்கெட்டுகளையும் கருணாரத்தனே மதுசங்க்கா தனஞ்செய டிசில்வா மற்றும் சணக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 374 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -