ரிஷப் பண்ட் ப்ளெயிங் லெவன்ல இருக்கணுமா? வேணாமா? – ரோகித்துக்கு கவாஸ்கர் கொடுத்த டிப்ஸ்!

0
374
Rishabh Pant and Sunil Gavaskar

ரிஷப் பண்ட்டை பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்று ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை கூறியிருக்கிறார் கவாஸ்கர். 

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி வருகிற நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடக்க உள்ளது  இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

முதலில் இந்திய அணியின் பந்துவீச்சில் குழப்பம் நிலவி வந்தது. ஆனால் தற்போது அதில் எந்தவித சிக்கலும் இல்லை என்பதால் அதில் இருக்கும் விமர்சனங்கள் முற்றிலும் நின்றுவிட்டன. இந்திய அணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் 2 ஸ்பின்னர்களுடன் இறங்க வேண்டுமா? அல்லது ஒரு ஸ்பின்னர் மட்டும் இருந்தால் போதுமா? என்பதுதான்.

அதாவது ஒரு ஸ்பின்னர் வெளியில் அமர்த்தப்பட்டுவிட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் உள்ளே எடுத்து வரப்பட்டால் கூடுதல் பேட்டிங் இருக்கும். மேலும் அவர் இடது கை பேட்ஸ்மேன் என்ற கருத்துக்களும் நிலவி வருகின்றன. அதற்கு தற்போது பதில் அளித்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

“என்னை பொறுத்தவரை, ஒரு ஸ்பின்னர் மற்றும் 3 வேகம் + ஒரு வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர். இது மட்டும் போதுமானது. வேகப்பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து ஹார்திக் பாண்டியாவும் பந்துவீசுவார் என்பதால், அவர் ஐந்தாவது பவுலராக இருப்பார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இருக்க வேண்டும். 

- Advertisement -

பண்ட் ஐந்தாவது இடத்திலும், ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்திலும் தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்திலும் களம் இறங்கினால் சரியாக இருக்கும். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலம் பொருந்தியதாக இருக்கும்.” என்று ரோகித் சர்மாவிற்கு அறிவுறுத்தினார்.