இந்திய வீரர்களை தரக்குறைவாக பேசிய ஆஸி., முன்னாள் வீரருக்கு தக்க பதிலடி கொடுத்த சுனில் கவாஸ்கர்!! – நெத்தியடி

0
1060

இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட பிசிசிஐ மறுத்து வருவது குறித்து கருத்து தெரிவித்த ஆடம் கில்கிறிஸ்ட்-க்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

பி சி சி ஐ ஒப்பந்தத்திற்கு கீழே வரும் வீரர்களுக்கு பிசிசிஐ நடத்தும் தொடர்கள் மற்றும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாட அனுமதி இருக்கிறது. வெளிநாடுகளில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை. அதையும் மீறி விளையாடினால் பிசிசிஐ கொடுக்கும் ஊதியம் மற்றும் இந்திய அணியில் இருந்து ஒப்பந்தம் என அனைத்தும் தடை செய்யப்படும் என்பதால் வீரர்களும் அதனை செய்வதற்கு தயங்கி வருகின்றனர்.

- Advertisement -

புள்ளிவிவரப்படி 80 சதவீத கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். ஆகையால் இந்திய வீரர்களை தங்களது உள்நாட்டு டி20 தொடர்களில் விளையாட வைத்தால் நிச்சயம் நிறைய ரசிகர்களை பெறலாம் என்கிற நோக்கில், வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் பலர் இந்திய வீரர்களை நிச்சயம் தங்களது நாட்டின் டி20 தொடர்களில் விளையாட வைக்க வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிரிஸ்ட் ஒருபடி மேலே சென்று பிசிசிஐ மீது கடும் விமர்சனத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் வீரர்களுக்கு உடனடியாக ஒப்புதல் சான்றிதழ் அளித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் அதுதான் கிரிக்கெட் உலகிற்கு ஆரோக்கியமானது என்று கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதற்குத்தக்க பதிலடி கொடுத்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தனது பேட்டியில்: “வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் எனக் கூறுவது கிரிக்கெட் உலகிற்கு நல்லது சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை, அவர்களுக்கு நிறைய ஸ்பான்சர்ஷிப் வரவேண்டும் என்பதால் தான். ஏனெனில் இந்திய வீரர்களிடம் நிறைய ஸ்பான்சர்ஷிப் இருக்கிறது. மேலும் தனித்தனியே ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருக்கின்றனர். இதுதான் முக்கிய காரணம்.

- Advertisement -

இந்திய வீரர்களை பாதுகாப்போடும் நல்ல உடல்நிலையோடும் வைத்திருப்பதற்கு பிசிசிஐ நிறைய முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடினால் உடல்நிலையை பேணிக்காப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட முடியாமலும் போகலாம். பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருந்தால் எப்போது ஓய்வு அளிக்க வேண்டும் எப்போது விளையாட வைக்க வேண்டும் என தொடர்ந்து கண்காணிப்பில் வீரர்கள் இருப்பர். இதனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவினை பிசிசிஐ எடுத்திருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் இதனை புரிந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.” என்றார்.