ரிஷப் பண்ட் என்ன தூக்க மாத்திரை போட்டு இருக்காரா? – ஜடேஜா, கவாஸ்கர் சாடல்

0
725

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபார பந்துவீச்சால் 45 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்படுகின்றது.

இது குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவும், விராட் கோலிக்கு முன்னதாக அக்சர் பட்டேலை பேட்டிங் செய்ய அனுப்பியதற்காக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளனர்.

- Advertisement -

இது குறித்து பேசிய கவாஸ்கர்,
“அணியின் இந்த முடிவு கோலிக்கு நல்ல செய்தியை அனுப்பவில்லை. அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். கோலியே நான் பின்னர் களமிறங்குகிறேன் என்று கூறி இருந்தால் அது வேறு விஷயம். வீரர்கள் அறையில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது கடினம். புரிந்து கொள்ளுங்கள். அக்சர் நன்றாக விளையாடியுள்ளார், ஆனால் இது முற்றிலும் தவறான முடிவு இன்று கவாஸ்கர் கூறினார். நாளை ஆட்டம் தொடங்கியதும் விக்கெட் விழுந்தால் ரிஷப் தான் பேட்டிங் செய்ய வரவேண்டும். இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய அஜய் ஜடேஜா பண்ட் என்ன தூக்க மாத்திரை சாப்பிட்டு இருந்தாரா? அவரை ஏன் அனுப்பவில்லை என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி அனுப்பினார்களா என்று தெரியவில்லை. ரிஷப் பந்தற்கு உடல் முடியாமல் கூட போயிருக்கலாம். நாம் இங்கு இருந்து எதுவும் சொல்ல முடியாது. ஆனால் பேட்டிங் வரிசையில் மாற்றினால் அது அணியின் தன்மையை பாதிக்கும் என்று அஜய் ஜடேஜா கூறி உள்ளார். தற்போது இந்திய அணியில் ரிஷப் பந்த் , ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் மட்டும்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்திடம் இந்திய அணி ஒரு முறை கூட தோல்வியை தழுவியது இல்லை.