கவுதம் கம்பீரின் டி20 உலகக்கோப்பை இந்திய அணி பிளேயிங் லெவன்!

0
1571
Gambhir

இன்றோடு ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன.

இந்தக் தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

12 அணிகளை இரு குழுக்களாக பிரித்து நடத்தப்படும் சூப்பர் 12 சுற்றில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து இலங்கை அயர்லாந்து ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா பங்களாதேஷ் ஜிம்பாப்வே நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.

நாளை உலக கோப்பையின் பிரதான சுற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்னொரு போட்டியில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி நாளை மறுநாள் மெல்போர்ன் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்திற்கான தனது இந்திய அணியை கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

கவுதம் கம்பீர் பிளேயிங் லெவனில் முதல் ஆறு இடங்களில் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள்.

ஏழாவது இடத்தில் அக்சர் படேல் ஆரம்பித்து அடுத்து சாகல், ஹர்சல் படேல், முகமது சமி ஆகியோர் இருக்கிறார்கள். பதினோராவது வீரராக புவனேஸ்வர் குமார் இல்லை அர்ஸ்தீப் சிங் இருவரில் ஒருவர் வருகிறார்கள்.

இவரது அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை. மேலும் ஆரம்பத்திலிருந்து கவுதம் கம்பீர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!