விராட் கோலிக்கு ஏன் தொடர் நாயகன் விருது? – கம்பீரின் கேள்வியால் கடுப்பான ரசிகர்கள்

0
558

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 317 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முழு காரணமாக விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் விளாசினார். இதேபோன்று தொடக்க வீரர் சுப்மான் கில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். பந்துவீச்சில் முகமது சுராஜ் அபாரமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆட்ட நாய்கள் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய கம்பீர், விராட் கோலிக்கு மட்டும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது சரியல்ல. முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக தொடர் நாயகன் விருது இருவருக்கும் பகிர்ந்து வழங்கி இருக்க வேண்டும். எனக்கு விராட் கோலியின் இந்த சதம் பெரியதாக தெரியவில்லை.

ஆனால் அவர் சதம் அடித்ததற்கு பிறகு விளாசிய சிக்ஸர்களை தான் நான் முக்கியமானதாக கருதுகிறேன். விராட் கோலி இது போன்ற ஒரு ஆட்டத்தை உலகக்கோப்பை தொடர்பு முழுவதும் விளையாட வேண்டியது அவசியம். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அனுபவம் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கு தேவை. நீங்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும்தான் பொறுமையாக நிலைத்து ஆங்கர் ரோல் செய்ய முடியும். டி 20 போட்டிகளில் உங்களால் அதை செய்ய முடியாது.

விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோரை சுற்றியே இந்திய அணியின் பேட்டிங் இருக்க வேண்டும். அப்போதுதான் சூரிய குமார்யாதவ் போன்ற வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாட முடியும். தற்பொழுது உள்ள இந்திய அணியில் இந்த இரண்டு வீரர்கள் தான் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது போன்று சுப்மான் கில், கடந்த ஒரு ஆண்டாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்க வீரராக தன்னுடைய இடத்தை அவர் உறுதி செய்து விட்டார் என்று நினைக்கிறேன். சுப்மான் கில் இதேபோன்று ஆட்டத்தை பல ஆண்டாக விளையாடினால் அவர் பல்வேறு சாதனைகளை உடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கம்பீர் கூறினார்.

- Advertisement -