இந்திய பேட்ஸ்மேன்கள் தவறு செய்துவிட்டார்கள்.. கவுதம் கம்பீர் விளக்கம்

0
229

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டில் சதம் அடித்த கேப்டன் ரோஹித் ஷர்மாவைத் தவிர, இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் இந்தத் தொடரில் ரன் குவிக்க பெரிதும் தடுமாறினர். அதன் பிறகு 142 பந்துகளில் 59 ரன்கள் புஜாரா எடுத்தார். இதனை தவிர டாப் ஆர்டரில் எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை.

- Advertisement -

இதனால் பேட்டர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழலுக்கு ஏற்று  விளையாடும் கலையை மறந்துவிட்டார்களா  என்ற கேள்விக்கு வழிவகுத்தது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 8-வது இடத்தில் பேட் செய்யும் அக்சர் படேல் தான், இரண்டாவது டெஸ்டின் முடிவில் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்.

நான்கு இன்னிங்ஸ்களில் 92.50 சராசரியுடன் 185 ரன்களைக் குவித்த அக்சர், ரோஹித்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரர்களில் தொடர்கிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும்  அஷ்வின் ஆகியோரின் ரன்களும் முதல் இரண்டு டெஸ்டில் இந்தியாவுக்கு உதவியுள்ளன. இந்த நிலையில், ரஞ்சி டிராபி தொடருக்கு முன், சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடியிருந்தால், இந்தியாவுக்கு பலன் கிடைத்திருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதன்மையான உள்நாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடியிருக்க வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “100 சதவிகிதம் அல்ல, 200 சதவிகிதம் செய்திருக்க வேண்டும்” என்று ஸ கம்பீர் கூறினார். இது குறித்து பேசிய அவர்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் சிலர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் 20 நாள் முகாம்களை நடத்தினாலும் பரவாயில்லை அல்லது நெட்சில் பேட்டிங் செய்தாலும் பரவாயில்லை, பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத அவர்களின் மனநிலையால் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் போராடியது. இது ஒரு எதிர்மறை எண்ணம்.
இந்திய பேட்டர்களுக்கும் அப்படித்தான். நான் பேட்டர்களைப் பற்றி பேசுகிறேன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை, அவர்கள் ஓய்வு எடுக்கலாம்.

ஆனால் பேட்ஸ்மேன்கள் ரஞ்சி டிராபியில் விளையாடி சதம், இரட்டை சதம் அடிக்க வேண்டும். ஒரு முக்கியமான தொடருக்கு முன் சிவப்பு-பந்து கிரிக்கெட்டை விளையாடுவது மிகவும் முக்கியம் என்று கம்பீர் கூறினார்.