தற்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து தலைமை பயிற்றுநர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான இளம் வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனர். இந்த போட்டியில் அணி வெற்றிபெற்றாலும், திறமையாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் குவித்து தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷியின் வாய்ப்பு குறித்து கௌதம் கம்பீர் பேசும்போது “வைபவ்வின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவான உரையாடல் நடந்துள்ளது. அவரிடம் எவ்வளவு திறமை இருக்கிறது, அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒருவர், இப்போதுதான் அணிக்குள் வந்தவரை விட எப்போதும் முன்னணியில் இருப்பார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, நிச்சயம் நீண்ட வாய்ப்பு வழங்கப்படும்.
“இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை டிரஸ்ஸிங் ரூமில் திறமைகளும் போட்டிகளும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் கிரிக்கெட் இப்படித்தான் இயங்கும். அவர் 15 வயது வீரராக இருந்தாலும் சரி, 30 வயது வீரராக இருந்தாலும் சரி, வாய்ப்பு வரும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.