இளம் வீரர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்! காரணம் இது தான்

0
541

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக இசான் கிஷன், 32 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை சேர்த்தார். நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் 17 ஓவர்களை சுழற்பந்துவீச்சுக்கே வழங்கினார்கள்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர்,

- Advertisement -

இது மோசமான ஆடுகளம் . டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை. நேற்றை ஆட்டத்தில் ஹர்திக் ஒரு தவறை செய்தார். அதில் சாஹல் 2 ஓவர் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து விக்கெட் ஒன்றையும் வீழ்த்தினார். ஆனால் , அவருக்கு ஹர்திக் ஏன் முழு ஓவர்களையும் தரவில்லை என தெரியவில்லை. ஹர்திக் தன்னுடைய 4 ஓவர்களை வீசியதற்கு பதில், சாஹலை முழுமையாக பயன்படுத்தி இருந்தால், நியூசிலாந்து அணியை 85 ரன்களில் சுருட்டி இருக்கலாம்.

ஆர்ஸ்தீப் சிங் பார்ம்க்கு திரும்பிவிட்டார் என சொல்ல முடியாது. காரணம் அவர் பந்துவீசியது நியூசிலாந்து அணியில் பேட்டிங் தெரியாத வீரர்களிக்கு தான் அவர் பவுலிங் செய்தார். இன்றைய இளம் வீரர்கள் சிக்சர் அடிப்பதையே திறமை என நினைக்கிறார்கள். சுழற்பந்து வீச்சை சிங்கிள்ஸ் அடித்து ஆட்டத்தை நகர்த்துவதும் உண்மையான திறமை தான். பயிற்சியின் போது யாரும் அப்படி செய்வதில்லை.

இன்றைய ஆட்டத்தில் இந்தியா 45 பந்துகள் வரை பவுண்டரியே அடிக்கவில்லை. அப்போது உங்களுக்கு சிங்கிள்ஸ் தான் காப்பற்றும். ஹர்திக், சூர்யகுமார் ஆகியோர் தடுமாறினாலும், வெற்றியை அணிக்கு பெற்று தந்து விட்டார்கள்.அதிக சிங்கிள்ஸ் ஆடியிருந்தால் போட்டியில் முன்கூட்டியே வென்று இருக்கலாம். கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்ற நியூசிலாந்துக்கு என் பாராட்டுக்கள். இந்த ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றியதே நியூசிலாந்தின் யூத்திகள் தான் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -