நோ பால் வீசுவதை தடுப்பது எப்படி? புதிய முறையை கொண்டு வர கம்பீர் கோரிக்கை

0
280

இலங்கைக்கு  எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் நமது பந்துவீச்சாளர்கள் ஏழு நோ பால்களை வீசி உள்ளனர். குறிப்பாக ஆர்ஸ்திப் சிங் மட்டும் ஐந்து நோபால்களை வீசினார். இதன் மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர், ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துச்சு தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை.

- Advertisement -

ஒரு பந்துவீச்சாளர் நோ பால் வீசுகிறாரா என்பதை கேப்டன் கட்டுப்படுத்த முடியாது. நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயிற்சி செய்யும் போது போட்டியில் விளையாடுவது போல் நினைத்துக் கொண்டு நோ பால் வீசாமல் பழக வேண்டும். நீங்கள் வலைப் பயிற்சியில் நோ பால் வீசி விட்டு போட்டிக்கு வந்தால் இங்கேயும் அப்படித்தான் செயல்படுவீர்கள். மேலும் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணியில் ஆர்ஸ்தீப் விளையாடுகிறார்.

இதனால் தான் இந்த தவறு நடந்திருக்கிறது. இனிமேல் காயத்திலிருந்து குணமடையும் வீரர் நேரடியாக இந்திய அணிக்கு கொண்டு வரக்கூடாது. அதற்கு பதில் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தங்களுடைய பார்மை மீட்க வேண்டும். அதன் பிறகு தான் இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும். காயத்திலிருந்து நேரடியாக விளையாடுவதனால் தான் இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது.

என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். இந்த போட்டியில் அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார். நிச்சயம் ஹர்திக் பாண்டியா கேப்டனா அல்ல ஒரு நல்ல தலைவனாக இந்திய கிரிக்கெட் அணியில் உருவெடுப்பார் என நான் நம்புகிறேன். 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்த போது இந்திய அணி தோல்வியை தழுவும் என்று எனக்கு தெரியும். ஆனால் சூரிய குமார யாதவ், அக்சர் பட்டேல் சிவம் மவி விளையாடிய ஆட்டம் நிச்சயம் என்னை உற்சாகப்படுத்தியது. இதுபோன்ற போராட்ட குணம் தான் இந்திய அணிக்கு தேவை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -