பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஷ்வினை சேர்க்காமல் கௌதம் காம்பீர் வெளியிட்ட இந்திய அணி

0
274
Ravichandran Ashwin and Gautham Gambhir

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியாவில் வைத்து நடைபெற இருந்த இந்தத் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் சில நாட்களிலேயே இந்தத் தொடர் தொடங்குகிறது. இன்னமும் ஒரு மாத காலம் இருக்கும் போதே அனைத்து அணிகளும் இந்த தொடரில் விளையாட போகும் தங்கள் நாட்டு வீரர்களின் விவரத்தை வெளியிட்டு விட்டனர். இந்திய அணியும் இதில் ஆடப் போகும் வீரர்களின் விவரத்தை வெளியிட்டதோடு இல்லாமல் இந்தத் தொடருக்கு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டது.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இதுவரை உலக கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட பாகிஸ்தான் அணியிடம் தோற்காமல் இருக்கும் இந்திய அணி இந்த தொடரையும் வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆட்டத்தில் ஸ்குவாடில் இருந்து எந்த 11 வீரர்கள் விளையாட வைக்கலாம் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கௌதம் காம்பீர் பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பதிலளித்த காம்பீர் இந்த இந்திய அணியை வெளியிட்டுள்ளார். அதில் துவக்க வீரர்களாக ரோகித் மட்டும் ராகுலை தேர்ந்தெடுத்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கோலி, சூரியகுமார் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று காம்பீர் கூறியுள்ளார். ஆல்ரவுண்டர் களுக்கான இடத்தில் முறையே ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா நாட இருக்கின்றனர். ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் சக்கரவர்த்தியை காம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அழுக்கான இடத்தில் புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரை காம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும் மெயின் ஸ்குவாடில் ஷர்துல் தாகூர் இருந்திருந்தால் அவரை நிச்சயம் அணியில் எடுத்து இருப்பேன் என்றும் அவர் கூறினார். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சார்துல் தாகூரை ஆட வைத்திருப்பேன் என்று காம்பிர் கூறினார். தொடரின் முதல் ஆட்டத்திலேயே நிச்சயம் மைதானம் முழுமையாக சூழலுக்கு ஒத்துழைக்காது என்றும் தொடர் போகப்போக மைதானம் சூழலுக்கு அதிகமான சாதகம் உள்ளதாக மாறும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட காம்பீர் வெளியிட்ட இந்திய அணி – ரோகித், ராகுல், கோலி, சூரியகுமார், பண்ட், ஹார்திக், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, பும்ரா மற்றும் முகமது ஷமி.

- Advertisement -