ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் தான் தேவை – கம்பீரின் பேச்சுக்கு ஜடேஜாவின் ரியாக்சன்

0
430

கிரிக்கெட்டில் இருந்து அரசியல் கட்சிக்கு கௌதம் கம்பீர் தாவிய பிறகு தற்போது அனைத்து தரப்பு கிரிக்கெட் வீரர்களையும் அவர் வம்பு இழுக்கும் வகையில் பேசி வருவது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலி சர்வதேச ஒரு நாள் போட்டியில் 45 சதத்தை அடித்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனால் கம்பீர் மட்டும் சச்சின் உடைய காலத்தை இங்கு கோலிடன் ஒப்பிட கூடாது என்று வித்தியாசமாக கூவினார்.

தற்போது கம்பீர் ஜடேஜாவை வம்பு இழுக்கும் வகையில் பேசி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஜடேஜா காயம் காரணமாக கடந்த ஆறு மாதத்தில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனினும் தனது மனைவியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜடேஜா பம்பரம் போல் சூழல்ன்றது அவருடைய காயத்தை அதிகமாக்கியதாக புகார்கள் எழுந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அக்சர்பட்டேல் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் கம்பிர் நேற்று அளித்த பேட்டி ஜடேஜாவை கடுப்பாக்கி இருக்கிறது. அதில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேலை தான் உலக கோப்பை இந்திய அணியில் தாம் சேர்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த சில போட்டிகளில் அக்சர் பட்டேல் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இதனால் அக்சர் பட்டேல்,குல்தீப் யாதவ்,  வாஷிங்டன் சுந்தர் ,ரவி பிஸ்னாய் போன்ற வீரர்களைத்தான் இந்திய அணி உலக கோப்பை தொடர்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கம்பீரின் இந்த பேச்சுக்கு ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக பதில் அளித்துள்ளார். அதில்  நாம் எதுவும் பேசக்கூடாது சிரித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார். கிரிக்கெட்டை தாண்டி இரண்டு பேருமே ஒரே அரசியல் நிலைப்பாட்டையும், ஒரே அரசியல் கட்சியிலும் உள்ள நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜடேஜா எப்போது இந்தியா அணிக்கு திரும்புவார் என்பது குறித்து தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.