அடுத்த வருடம் சி.எஸ்.கே இந்த மூன்று வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ளும் ; நிச்சயம் அதில் தோனி இருக்கமாட்டார் – கம்பீர்

0
142
Gambhir and MS Dhoni

அடுத்த ஆண்டு நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடர் கடந்த சில ஆண்டுகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கப் போகிறது. அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் வர உள்ளதால் மொத்தமாக 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி போகின்றன. இது ஒரு புறமிருக்க மறுபுறம் ஒவ்வொரு அணியும் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

எனவே ஏறக்குறைய அடுத்த ஆண்டு ஒவ்வொரு அணியிலும் பல வீரர்கள் இடம் மாறி விளையாட போவதை நாம் பார்க்கப் போகிறோம். நடந்து முடிந்த 2021க்கான ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது. அந்த அணி அடுத்த ஆண்டு கேப்டன் மகேந்திர சிங் தோனி யை தக்க வைத்துக் கொள்ளாது என்று கௌதம் கம்பீர் அதிரடியாக கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி மொத்தமாக 6 கோப்பைகளை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு கோப்பையும் ஐபிஎல் தொடரில் நான்கு கோப்பையும் மொத்தமாக ஆறு கோப்பைகள் அவர் வென்றிருக்கிறார். அதேசமயம் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக ஒரு சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 5 ஐபிஎல் தொடர் கோப்பைகளை வென்று இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி தலை சிறந்த கேப்டன் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் ஐபிஎல் தொடரை ஒப்பிட்டு பார்க்கையில் மகேந்திரசிங் தோனியை விட ஒரு கோப்பை அதிகமாக ரோஹித் சர்மா வென்றுள்ளார். எனவே ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் மகேந்திர சிங் தோனி விட ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க வாய்ப்பு இல்லை

அடுத்த ஆண்டு நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி முதல் வீரராக தக்க வைத்துக்கொள்ளும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறிவரும் நிலையில், அடுத்த ஆண்டு சென்னை அணி நிர்வாகம் மகேந்திர சிங் தோனி தக்க வைக்க வாய்ப்பு இல்லை என்று கௌதம் கம்பீர் கூடுதலாக கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு சென்னை நிர்வாகம் ஏதேனும் ஒரு பொறுப்பை தோனிக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் வீரராக தக்க வைக்க வாய்ப்பு இல்லை. தற்பொழுது உள்ள சென்னை அணியில் ருத்துராஜ் ஜெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் ஆகியோர் தக்க வைக்கப் படாத அதிக வாய்ப்பு உள்ளது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு சென்னை அணி நிர்வாகம் மகேந்திர சிங் தோனி தக்கவைக்க வாய்ப்பு இல்லை என்றால், நிச்சயமாக ருத்துராஜ் ஜெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஃபேப் டு பிளேசிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய வீரர்களில் ஏதேனும் மூன்று வீரர்கள் தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நாம் நம்பலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதையும் நாம் உறுதிப்படுத்திக் கூறிவிட முடியாது. சென்னை அணி நிர்வாகம் எந்தெந்த வீரர்களை அடுத்த ஆண்டு தக்க வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.