இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவின் இடத்தில் இந்த வீரர் சரியாக இருப்பார் – கவுதம் கம்பீர் நம்பிக்கை

0
322
Ishan Kishan and Gautham Gambhir

இந்திய அணிக்கு கடந்த சில வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான வீரர்களாக பாதிக்கப்பட்டவர்கள் ரஹானே மற்றும் புஜாரா. ஆனால் இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. மிகப்பெரிய விமர்சனம் இவர்கள் இருவர் மீது ரசிகர்கள் மத்தியில் வெளிப்படையாக எழுந்தது. இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிசிசிஐ இடம் வலியுறுத்தினார்.

இருப்பினும் இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தொடரிலும் இவர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாட காரணத்தினால் இவர்கள் இருவரையும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சேர்க்கவில்லை.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள்

மார்ச் 4ம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பட்டியலில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில் மற்றும் பிரியாங் பாஞ்சால் ஆகிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்.

பிசிசிஐ இனிவரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் மறு பக்கம் புஜாரா, ரஹானே மற்றும் விருத்திமான் சஹா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்கிற செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனவே இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இடங்களில் எந்த வீரர்கள் இடம் பெற்று விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புஜாரா இடத்தில் இவரை விளையாட வைக்கலாம்

முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் புஜாரா விளையாடிய இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். ஸ்ரேயாஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே சதமடித்து சாதனை படைத்தார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடிக்கும் 16வது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்திய வீரர்கள் மத்தியில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த வீரர்களான முகமது அசாருதீன், விரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, ஷிகார் தவான், ரோஹித் சர்மா மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இடம் பெற்றார்.