மீண்டும் தனது ஐபிஎல் பயணத்தை லக்னோ அணியுடன் தொடரவிருக்கும் கௌதம் கம்பீர்

0
685
Gambhir and Goenka Lucknow Team

ஐபிஎல் தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களில் கௌதம் கம்பீர் பெயர் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடி, பின்னர் 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாடினார். கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்தி 2012 & 2014 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியை வெற்றி வாகை சூட வைத்தார். ஒரு கேப்டனாக சிறப்பாக விளையாடி, அதே சமயம் தனது அணியை மிக சிறப்பாக வழிநடத்தி இரண்டு முறை கொல்கத்தா அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தார். பின்னர் இறுதியாக 2018 ஆம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய பின்னர் முற்றிலுமாக ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரில் 152 இன்னிங்ஸ்களில் அவர் 4217 ரன்கள் ஒரு சதம் கூட அவர் குவிக்கவில்லை என்றாலும் இதுவரை 36 அரைசதங்கள் அவர் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 31.01 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 123.88 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லக்னோ அணியின் வழிகாட்டியாக புதிய பொறுப்பேற்க இருக்கும் கம்பீர்

அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்க போகின்றன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் கைப்பற்றியது. சமீபத்தில் அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டார். தற்பொழுது அந்த அணியின் புதிய மெண்டராக ( வழிகாட்டி ) கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கூடுதலாக அந்த அணியின் துணை பயிற்சியாளராக விஜய் தாஹியா நியமிக்கப்பட்டிருக்கிறார்
லக்னோ அணியின் வழிகாட்டியாக புதிய பொறுப்பேற்க இருக்கும் கம்பீர், தற்பொழுது தனது பொறுப்பு குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர், ” வெற்றி பெற வேண்டும் என்கிற வேகம் இன்னும் என்னுள் இருந்துகொண்டே இருக்கின்றது. நான் இந்த அணியில் இணைந்து டிரெஸ்ஸிங் ரூமில் மட்டும் என்னுடைய பொறுப்பை அடக்கிக் கொள்ளப் போவதில்லை. இந்த அணியின் நன்மைக்காகவும், அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் நன்மைக்காகவும் உரிய வகையில் என்னுடைய உழைப்பு இருக்கும். இந்த வாய்ப்பு கொடுத்த அணியின் உரிமையாளர் டாக்டர்.கோயங்கா அவர்களுக்கும் அவரது நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றி” என்று கௌதம் கம்பீர் இறுதியாக கூறியுள்ளார்.