2023 ஐபிஎல்-ல் வழங்கப்பட்ட அனைத்து விருதுகள் மற்றும் பரிசுத்தொகை முழு லிஸ்ட்!

0
2673
Ipl2023

பதினாறாவது ஐபிஎல் சீசன் நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முடிவுக்கு வந்திருக்கிறது!

நேற்று பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்தத் தொடர் முழுக்கவும் சேர்த்து, மேலும் 11 விருதுகள், தலா 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை யார்?யார்? வென்றார்கள் என்ற விவரங்களைப் பார்ப்போம்.

அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் விருதை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 890 ரன்கள் அடித்து வென்றார்.

அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் விருதை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி 28 விக்கெட்கள் வீழ்த்தி வென்றார்.

- Advertisement -

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான விருதை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்ததின் மூலம் வென்றார்.

இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறந்த ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிய வீரருக்கான சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆப் த சீசன் விருதை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வெல் 183.48 ஸ்ட்ரைக்ரேட் வைத்து வென்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக மதிப்பு கொண்ட வீரருக்கான மோஸ்ட் வேலிபில் பிளேயர் ஆஃப் த சீசன் விருதை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் வென்றார்.

ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்களுக்கான கேம் சேஞ்சர் ஆஃப் த சீசன் விருதையும் சுப்மன் கில்லே வென்றார்.

இந்தத் தொடரில் அதிக ஃபோர் அடித்தவர்களுக்கான மோஸ்ட் ஃபோர் ஆஃப் த சீசன், விருதையும் 85 ஃபோர்கள் அடித்ததின் மூலம் சுப்மன் கில்லே வென்றார்.

அதிக தூரம் சிக்ஸர் அடித்தவர்களுக்கான லாங்கஸ்ட் சிக்ஸ் ஆப் த சீசன் விருதை, 115 மீட்டர் சிக்ஸர் அடித்து பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் வென்றார்.

இந்தத் தொடரின் மிகச்சிறந்த கேட்ச் பிடித்தவர்களுக்கான கேட்ச் ஆஃப் சீசன் விருதை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் வென்றார்.

களத்தில் சரியான முறையில் நடந்து கொள்வதற்கான பேர் ப்ளே விருது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரின் நல்ல ஆடுகளம் மற்றும் நல்ல மைதானத்திற்கான பெஸ்ட் பிட்ச் அண்ட் கிரவுண்ட் ஆப் தி சீசன் வருது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு வழங்கப்பட்டது.