அவுட் ஆன பிறகு விரக்தியில் விராட் கோஹ்லி செய்த காரியம்

0
155
Virat Kohli Frustrated after Losing his Wicket

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் மாகாணத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இந்திய அணி மோசமாக ஆடியது. கேப்டன் கோலி மற்றும் ஷர்தூல் தாகூரின் அரைசதத்தின் உதவியால் 191 ரன்கள் எடுத்தது. ரகானே, புஜாரா போன்றவர்கள் முதல் இன்னிங்சில் ரன்ங்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை.

இங்கு அந்த வழக்கின் முதல் இன்னிங்சில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. துவக்க வீரர்களான பர்ன்ஸ், மற்றும் ஹமீத் விரைவாக வெளியேறினர் இந்த தொடர் முழுவதும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் அற்புதமான பந்துவீச்சின் மூலமாக ஆட்டமிழந்தார். இருந்தாலும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆனால் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆலி போப் அற்புதமாக விளையாடி அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

பின்பு 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் இருவரும் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். ராகுல் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டாலும் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சிறப்பாக ரன்கள் சேர்த்து தனது முதல் ஓவர்சீஸ் சதத்தை நிறைவு செய்தார். இவருக்கு புஜாராவும் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்க இந்திய அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.

ஆனால் வரிசையாக 2 விக்கெட்டுகள் வீழவும் களத்திற்கு இந்திய அணியின் கேப்டன் கோலி வந்தார். இந்த தொடர் முழுவதும் ரசிகர்கள் சதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை நிறைவேற்றும் எண்ணத்துடன் விராட் கோலி சிறப்பாக தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். அற்புதமாக கவர் டிரைவுகளை விலாசம் இந்த முறை நிச்சயம் சதம் அடித்து விடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி பந்துவீச வந்ததும் சிறிது தடுமாறி எட்ஜ் மூலம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் அவுட்டானார் கோலி. ஆடுகளம் பேட்டிங் பிடிப்பதற்கு மிகச் சிறப்பானதாக இருந்தும் சதம் அடிக்கும் வாய்ப்பை நிறைவேற்ற முடியாமல் விராத் கோலியின் திரும்பும்போது டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள சுவற்றில் கையால் பலமாக குத்தி தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு இவ்வளவு ஆசையாக காத்திருக்கும் விராட், அடுத்த டெஸ்டில் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.