பதற வைத்த பங்களாதேஷ் ; பரபரப்பான ஆட்டத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி!

0
11519
ICT

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று முக்கியமான ஒரு ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து அடிலைட் மைதானத்தில் விளையாடியது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஏமாற்றம் அளித்தார். ஆனால் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் இந்த ஆட்டத்தில் தடுமாற்றத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது அரை சதத்தை இந்த போட்டியில் விராட் கோலி அடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். சூரியகுமார் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 183 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அற்புதமான தொடக்கத்தை அழித்து இந்திய அணியும் ரசிகர்களையும் பதற வைத்தார். 21 பந்துகளில் அரை சதத்தை நொறுக்கினார். ஆறு ஓவர்களில் பங்களாதேஷ் அணி 66 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கிட்டது.

இதற்கு அடுத்து போட்டி பதினாறு ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டு இலக்கு 151 ரன்கள் ஆக மாற்றப்பட்டது. மீண்டும் தொடங்கிய போட்டியில் முதல் ஓவரை அஸ்வின் வீச, அதுவரை அபாரமாக விளையாடி வந்த லிட்டன் தாஸை கே எல் ராகுல் மிகப் பிரமாதமாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு பங்களாதேஷ் அணி வேகமாக விக்கட்டுகளை இழக்க தொடங்கியது. கடைசி ஓவரில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்த ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் தர கடைசி பந்துக்கு ஏழு ரன்கள் தேவைப்பட, ஆட்டத்தில் உச்சபட்ச பரபரப்பு நிலவியது, இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே பங்களாதேஷ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வந்த மலை இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததா அல்லது பங்களாதேச அணிக்கு பாதகமாக அமைந்ததா என்று புரியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்பே அணியை சந்திக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டுமா தேவை இல்லையா என்பதை, பாகிஸ்தான் அடுத்து விளையாடும் இரு ஆட்டங்களின் முடிவில் தெரியவரும். இந்த வகையில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதற்கு பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறது!