டெஸ்ட் போட்டியில் இரண்டு நாளுக்குள் தோற்காத நான்கு அணிகள்!

0
1779
Test Cricket

கிரிக்கெட் எத்தனை வடிவங்களை எடுத்தாலும், ஐந்து நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிக்குள் இருக்கும் சுவாரசியமும் சவால்களும் தனித்துவமானவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒளிந்திருக்கும் தீ போன்ற பரபரப்பை வேறு எந்த வடிவ கிரிக்கெட்டிலும் பார்க்க முடியாது!

சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்துக்கான டெஸ்ட் தொடர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய அணியிடம் இரண்டாவது நாளில் இரண்டு இன்னிங்ஸிலும் சுருண்டு தோல்வியைத் தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இப்படியான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு நாட்களுக்குள் சுருண்டு தோல்வியைத் தழுவாத அணிகள் என்று நான்கே அணிகள்தான் இருக்கின்றன. அப்படியான நான்கு அணிகள் யார் என்றுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்!

இந்தியா:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு சமீபக் காலங்களில் மிகச்சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டன் ஆகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்த காலகட்டங்களில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சி அற்புதமானதாக இருந்தது. உள்நாட்டில் எந்த அணிகளாலும் அசைக்க முடியாத வெற்றி சராசரியை சமீபக் காலத்தில் இந்திய அணி வைத்திருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் இந்திய டெஸ்ட் அணியின் வெற்றி சராசரி அதிகரித்திருக்கிறது. இப்படியான இந்திய அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு நாட்களுக்குள் தோல்வியைத் தழுவியது கிடையாது!

- Advertisement -

இலங்கை:

ஆசியக் கண்டத்தில் இருந்து மிக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடும் இலங்கை அணியும் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு நாட்களுக்குள் சுருண்டு தோல்வியைத் தழுவியது கிடையாது!

பங்களாதேஷ்;

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செயல்பாடு மிகச் சுமாராகவே இருந்தாலும், டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்களுக்குள் சுருண்டு தோல்வியை தழுவும் நிலை அவர்களுக்கு இதுவரை ஏற்பட்டது கிடையாது!

அயர்லாந்து:

சமீபத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை அயர்லாந்து அணி பெற்றிருந்த போதும் கூட, அயர்லாந்தை போல் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிடம் முதல் இரண்டு நாட்களுக்குள் சுருண்டு தோல்வியை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அயர்லாந்து அணியும் இந்தப் பட்டியலில் இணைகிறது!