டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாட இருக்கும் 4 பிரபல வீரர்கள்!

0
334
T20iwc2022

தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் பிரபல வீரர்களாக இருந்தும், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ள முடியாமலும், தற்பொழுது முதல்முறையாக டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கும் 4 பிரபல வீரர்களை பற்றித்தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்!

யுஸ்வேந்திர சாஹல் இந்தியா;

- Advertisement -

2016 ஆம் ஆண்டு இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கு அறிமுகமான சாஹல், தன் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் பிரதான மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணி விளையாடும் எல்லா வெள்ளைப் பந்து போட்டிகளிலும் இடம் பெற ஆரம்பித்தார். ஆனால் கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று எல்லாம் மாறிப் போனது. சாஹல் ரன்களை விட்டுக் தருகிறார் என்பதோடு, அவர் பந்தை மிகவும் மெதுவாக வீசுகிறார், உலகக் கோப்பை நடக்கும் யுஏஇ மைதானங்களில் கொஞ்சம் வேகமாக வீச வேண்டும், அதனால் சாஹலுக்குப் பதிலாக இளம் வீரர் ராகுல் சகரை சேர்ப்பது என்று முடிவானது.

அந்த உலகக் கோப்பையில் ராகுல் சகர் சரியாக ஜொலிக்காமல் போக, அதற்கு முன்பாக யு ஏ இ இல் நடந்த ஐபிஎல் தொடரில் சாஹல் அருமையாக பந்து வீசியதோடு, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக அருமையாக பந்துவீசி அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் தொப்பியைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இந்தியா டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று தற்போது விளையாட இருக்கிறார்.

சாம் கரன் இங்கிலாந்து :

- Advertisement -

இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரராக உருவெடுத்து வருகிறார் இந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாள ஆல்ரவுண்டர். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் போது காயத்தால் தவற விட்டார். ஆனால் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதோடு, நல்ல ஆல் ரவுண்ட் செயல்பாட்டிலும் சிறப்பாக இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் இவர், ஆட்டத்தில் முக்கியமான தாக்கத்தை உருவாக்கும் ஒரு வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை!

லாக்கி பெர்குசன் நியூசிலாந்து :

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக யார்க்கர்கள் வீசி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் செய்வதோடு, விக்கெட்டுகளையும் பறிக்கும் அபாயமான வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் காயத்தால் விளையாட முடியாமல் போனார். ஆனால் இந்த முறை நல்ல உடற் தகுதியோடு, நியூசிலாந்து டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று விளையாட தயாராக இருக்கிறார்.

ரோமன் பவெல் வெஸ்ட் இண்டீஸ் :

சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிக்குள் வந்த இந்த வலதுகை பவர் ஹிட்டர் மிகப்பெரிய சிக்சர்களை அனாசயமாக அடிக்கக் கூடியவர். உள்நாட்டில் இங்கிலாந்துடன் நடந்த ஒரு டி20 போட்டியில் அதிவேகமாக ஒரு சதம் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆகவும் மாறியிருக்கிறார். தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாட காத்திருக்கிறார்!