சூரியகுமார் வித்தை எங்ககிட்ட பலிக்காது.. இந்தியாவுக்கு 3 தூண்களே இல்ல – பாகிஸ்தான் பாஷித் கான் பேச்சு

0
213
Bazid

அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தாக்கம் தரக்கூடியதாக இருக்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஷித் கான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் ஒரே பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் இந்த பிரிவில் யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் இருக்கின்ற காரணத்தினால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது சுற்று முன்னேறி மோதிக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனவே குறைந்த பட்சம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதிக் கொள்ளும்.

- Advertisement -

சூரியக் குமாரால் முடியாது

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்று ஆக வேண்டிய கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன.

இது குறித்து பாஷித் கான் பேசும்பொழுது “சூரியகுமார் கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்கு எதிராகவுமே நல்ல ரன்கள் எடுக்கிறார். எப்படியோ இதுவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பான ரன்கள் எடுக்கவில்லை. அதற்குக் காரணம் தரமான வேகப்பந்து வீச்சு அல்லது வேறு ஏதாவது என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு பாகிஸ்தான் அணி ஒரு பிரச்சினையாக இருக்கிறது”

- Advertisement -

ஜடேஜாவும் இல்லை

“பாருங்கள் இங்கு அனைவருமே தரமான வீரர்கள். யாரும் திறமை குறைவானவர்கள் கிடையாது. ஆனால் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு கொண்டு வந்த தீவிரம் நிச்சயம் மற்றவர்களால் கொண்டுவர முடியாது. இந்திய அணி தற்பொழுது அதை மிஸ் செய்கிறது”

இதையும் படிங்க : பாண்டிச்சேரி கிரிக்கெட்டை லேசாக எடுத்து கொண்டார்.. வசீம் ஜாபர் அண்ணன் மகனின் ஒப்பந்தம் ரத்து..தந்தை பதிலடி

“அதே சமயத்தில் மக்கள் விராட் மற்றும் ரோஹித் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் இந்திய அணியை ஒருங்கிணைப்பதில் ஜடேஜா மிகவும் முக்கிய பங்கு வகித்தார். அவர் பேட்டிங் பந்துவீச்சு மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கில் களத்தில் நல்ல தாக்கத்தை கொடுத்தார். உலக கிரிக்கெட்டில் அவரை போல் சிறந்த ஃபீல்டர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் தற்போது இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -