ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்க இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்ய வைக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது விராட் கோலியை பார்த்து ஏதாவது மாற்றங்களை செய்ய சொல்வதற்கு இந்திய அணி நிர்வாகம் பயந்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலியின் மோசமான அணுகுமுறை
நடப்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து ஆறு முறை ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி விக்கெட்டை இழந்து இருக்கிறார். மூன்றாவது டெஸ்டில் இதை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நான்காவது டெஸ்டிலும் இதை மாற்றிக் கொள்வதாக இல்லை.
மேலும் அவர் நான்காவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் வெளியில் செல்லும் பந்தை விட்டு விளையாடி 30 ரன்னுக்கு மேல் எடுத்து நல்ல நிலையில் காணப்பட்டார். ஆனாலும் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்ததும் அவரது கவனம் சிதறியது. இதைத் தொடர்ந்து உடனே ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது பெரிய விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறது.
விராட் கோலியை பார்த்து பயப்படுகிறார்கள்
இதுகுறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது ” நிதீஷ் குமார் ரெடியை பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு உயர்த்தி சரியாக விளையாடாத விராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு கீழே இறக்க வேண்டிய சரியான நேரம் இதுவாக இருக்கிறது. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்”
இதையும் படிங்க: நீங்க செஞ்ச வரை போதும்.. டிரெஸ்ஸிங் ரூமில் கொதித்த கம்பீர்.. கொடுக்கப்பட்ட எச்சரிக்கை – வெளியான தகவல்கள்
“உங்களால் சரியாக விளையாட முடியாவிட்டால் நீங்கள் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யுங்கள். ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் அதை செய்திருக்கிறார். ஆனால் விராட் கோலியை இதை செய்ய வைக்க யாருமே நினைக்கவில்லை. ஏனென்றால் அவரைப் பார்த்து அணியில் இருக்கும் எல்லோருமே பயப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






