இந்திய வீரரான விராட் கோலி தற்போது நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார். சமீபத்தில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவர் படைக்க வேண்டிய சாதனைகள் இன்னும் ஏராளம் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா விராட் கோலியின் பரிணாம வளர்ச்சி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டின் பல சாதனைகளை அடுக்கியவராக விராட் கோலி தற்போது உயர்ந்து நிற்கிறார். தனது நுணுக்கமான பேட்டிங் மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையாலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் விராட் கோலிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை நிறைவு செய்து சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் நெருங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக பேட்டிங்கில் பெரிய ஃபார்ம் இல்லை என்றாலும் தற்போது அதனை எல்லாம் உடைத்து இருந்து முன்பை விட நன்றாக மெருகேறி இருக்கிறார்.
இவரது வளர்ச்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறும் பொழுது “உண்மையிலேயே விராட் கோலி டெல்லி சிறுவனாக இருந்து ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் வரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த பரிணாமம் மிகவும் அபாரமாக மாறிவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் என்ன விதைத்தாரோ தற்போது அதை நடைமுறையில் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.
விராட் கோலி பற்றி கூறும் போது எப்போதுமே தனித்து நிற்கக்கூடிய விஷயங்களில் ஒன்று அவரது தன்னம்பிக்கைதான். நான் 16 வருடங்களுக்கு முன்பாக 19 வயதான விராட் கோலியின் பேச்சை கேட்கும் போது விராட் கோலி தன்னைப் பற்றியும் தனது நம்பிக்கையைப் பற்றியும் பேசுவது தெளிவாக தெரியும். ஆனால் அப்போது என்ன இந்தப் பையன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருந்தது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் அவர் பேசியது அத்தனையும் அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க:கம்பீர் கொடுக்கும் புது நெருக்கடி.. சீனியர் வீரர்களுக்கு வித்தியாசமான பிரஷர்.. திட்டம் சரி வருமா?
கடந்த வருடம் ஆர்சிபி வீரர்களுடன் நான் நேர்காணலை எடுத்தேன். பின்னர் விராட் கோலியின் நேர்காணலை முடித்தேன். ஆனால் நேர்காணலை முடித்துவிட்டு விராட் கோலி வீட்டிற்கு செல்லாமல் நேராக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார். அவர் அப்படி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு அதற்குப் பிறகு தனது குடும்பத்தைப் பார்க்கச் சென்றார். அந்த அளவிற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு இருந்தது” என்று கூறி இருக்கிறார்.