ரோகித் அந்த 2 பங்களாதேஷ் வீரர்களை சாதாரணமா எடுக்க வேணாம்.. சவால் காத்திருக்கு – ஓஜா அறிவுரை

0
8
Ohja

அடுத்த வாரத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த முறை வருகை தரும் பங்களாதேஷ் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரிக்கை செய்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் அணியை டெஸ்ட் தொடரில் வென்று தொடரை கைப்பற்றிய காரணத்தினால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. எனவே இந்திய அணி நிர்வாகமும் பங்களாதேஷ் அணியை எச்சரிக்கையாகவே அணுகுகிறது.

- Advertisement -

விழித்துக் கொண்ட இந்தியத் தேர்வுக்குழு

அடுத்தடுத்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஓய்வு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பங்களாதேஷ் அணி சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால் பங்களாதேஷ் தொடருக்கு உடனடியாக பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக பங்களாதேஷ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதும், சிறப்பான முறையில் சுழல் பந்து வீசவும் செய்வார்கள் என்கின்ற காரணத்தினால், இந்த முறை டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீட்டுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அமைக்க இருப்பதாகவும் செய்திகள் வருகிறது.

- Advertisement -

அந்த 2 பேர் சாதாரணம் கிடையாது

இந்தத் தொடர் குறித்து பிரக்யான் ரோஜா கூறும் பொழுது ” பங்களாதேஷ் ஒரு துணைக் கண்ட அணி. அவர்கள் நல்ல சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெகதி ஹசன் தொடர் நாயகனாக வந்தார். அவர் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். அதேபோல அவருடன் அனுபவம் வாய்ந்த சாகிப் அல் ஹசன் இருக்கிறார். எனவே குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் விளையாடுவது சிரமமாக இருக்காது.

பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு பெரிய சவால் கொடுத்து விடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் இந்தத் தொடர் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கும். பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியை அவர்கள் சொந்த நாட்டில் வீழ்த்திய விதம், அவர்கள் சரியான திசையில் செல்கிறார்கள் என்று காட்டுகிறது. அவர்கள் இங்கு வரும்பொழுது நல்ல தொடராக அமையும்.

இதையும் படிங்க : இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்வோம்.. இதுக்கான எங்க பிளான் இதுதான் – பங்களாதேஷ் கேப்டன் பேச்சு

ஆஸ்திரேலியா தொடருக்கு தங்களை நிரூபிக்க விரும்பும் வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும் இந்த தொடரில் சாதிக்கக் கூடியவர்கள் ஆஸ்திரேலியா தொடரில் நல்ல நம்பிக்கையை பெறுவார்கள். எனவே இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராக அமைகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -