அர்ஜுன் டெண்டுல்கரை தற்போது விளையாட வைப்பது நல்ல முடிவா ? – மும்பை அணிக்கு ஆலோசனை கூறியுள்ள முகமது அசாருதீன்

0
604
Arjun Tendulkar and Mohammad Azharuddin

ஐந்து முறை ஐபிஎல் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது பந்து வீச்சு மிக மோசமாக உள்ளது. பந்துவீச்சு சரியாக இல்லாத காரணத்தினால் அனைத்து போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் போட்டியை இறுதிவரை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்ல முடியவில்லை.

அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா, பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடவில்லை. அவர்களது மோசமான பார்ம் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் ஒரு சில இடத்தில் தடுமாறி வருகிறது.

- Advertisement -
அர்ஜுன் டெண்டுல்கரை விளையாட வைக்க வேண்டும் – முகமது அசாருதீன்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் மும்பை இந்தியன்ஸ் குறித்து ஒரு சில விஷயங்களை தற்போது பேசியிருக்கிறார். சமீபத்தில் லக்னோ அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஃபேபியன் அலெனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் களமிறக்கியது. அதேபோல இனிவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை விளையாட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கரை விளையாட வைப்பதன் மூலம் நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் 8 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட டின் டேவிட் வெளியே உட்கார்ந்து இருப்பது சரியல்ல. அவ்வளவு தொகை கொடுத்து அவரை வாங்கி தொடர்ச்சியாக விளையாட வைக்காமல் இருப்பது நியாயமாகப் படவில்லை.

அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரையும் வெளியே உட்கார வைக்க முடியாது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத பட்சத்தில், அவர்களுக்கு அது அநீதியாகிவிடும். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சில மாற்றங்களை இனி வரும் போட்டிகளில் எடுத்தாக வேண்டும் என்று முகமது அசாருதீன் கூறியுள்ளார்.

- Advertisement -

6 போட்டிகளில் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கும் இருக்கிறது. இப் போட்டி வருகிற 21ஆம் தேதியன்று இரவு மும்பையில் 7:30 மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.