சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சந்தேகம் ; காரணம் இதுதான் – முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்

0
151
RP Singh about CSK playoffs qualification

கடந்த ஆண்டு ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்வியைத் தழுவி தடுமாறி வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி சென்னை அணியை வழிநடத்த போவதில்லை என்றும், ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக சென்னை அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மற்றொரு வெற்றியை ருசி பார்க்கும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் தொடர்ச்சியாக மூன்று தோல்வியை தழுவி இக்கட்டான நிலையில் தவித்து வருகிறது.

சென்னை அணியின் பிளே ஆப்ஸ் வாய்ப்பு குறித்து பேசியுள்ள ஆர் பி சிங்

சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் நக்மா அணைக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர் பி சிங் சென்னை அணி குறித்து ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.”சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனென்றால் மொத்தமாகவே 14 போட்டிகளில் ஆரம்பத்திலேயே 4 போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், எஞ்சியுள்ள 10 போட்டிகளில் குறைந்தது 7 அல்லது 8 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும்.

பொதுவாக இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரு அணி 7 அல்லது 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயமாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யலாம். இந்த ஆண்டு லக்னோ மற்றும் குஜராத் என 2 புதிய அணிகள் வந்துள்ளதால் ஒரு அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இன்னும் நம்மால் உறுதியாக கூறி விட முடியாது. எனவே சென்னையில் அதனுடைய தவறுகளை கூடிய விரைவில் சரி செய்து எஞ்சியுள்ள போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று ஆர் பி சிங் சென்னை அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி, அதனுடைய நான்காவது போட்டியில் ஹைதராபாத் அணியை வருகிற 9-ஆம் தேதி அன்று சந்திக்க இருக்கிறது. இப்போட்டி மும்பையில் மதியம் 3:30 அளவில் நடைபெற இருக்கின்றது.