இந்திய கிரிக்கெட்

பும்ராவுக்கு போட்ட பிளான் வேஸ்ட்.. எதை வெச்சு அவர் விஷயத்துல இந்த முடிவை எடுத்தீங்க – ஆஷிஸ் நெஹ்ரா கேள்வி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக தற்போது திகழ்ந்துவரும் ஜஸ்பிரித் பும்ரா இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் விளையாடுவார். மேலும் அவர் ஐந்து போட்டிகளிலும் விளையாடாமல் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த காரணத்தால் பும்ராவின் பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் அவர் இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான பதவியில் பரிசீலிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஸ் நெஹ்ரா பும்ராவின் பணிச்சுமை குறித்து எந்த முடிவையும் முன்னரே எடுக்க முடியாது என அதற்கு சில காரணங்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ராவின் பணிச்சுமையில் நடுவர் இந்திய அணியின் கேப்டன் கில் கிடையாது. அவர் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தானே. பும்ரா 12 முதல் 13 ஓவர்கள் வரை வீசும் போது அவர் 5 விக்கெட்டுகள் உடனடியாக எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் அந்த அளவிற்கு திறமையான கிரிக்கெட் வீரர். அவரது உடல் எந்த அளவிற்கு சமாளிக்கிறது என கேப்டன் மற்றும் பிசியோவிடம் கூறுவார். இதற்கு நீங்கள் திரைக்கதை எழுத முடியாது, இது ஒரு படம் அல்ல.

இதையும் படிங்க:ஜடேஜாவால இந்தியா தோற்கும்.. கம்பீர நம்ப முடியாது இதை செஞ்சாலும் செய்யலாம் – மஞ்ச்ரேக்கர் கருத்து

பும்ரா முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என கேள்விப்பட்டேன். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் மழை பெய்தால் பின்னர் என்ன செய்வது.? எனவே அவர் விஷயத்தில் யாருமே இது குறித்து இந்த முன் முடிவையும் விட முடியாது. அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது அவருக்கு நன்றாக கூட இருக்கலாம்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by