இந்திய அணி தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த இளம் வீரர் வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் -பயிற்சியாளர் கேரி கிறிஸ்டின் நம்பிக்கை

0
1892
Gary Kirsten about Indian Test Team

சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி அதற்கு பக்கபலமாக இருந்தவர் தான் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளறுமான கேரி கிறிஸ்டின்.

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த அவர் பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு தலைமை பயிற்சியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்தார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்த அவர் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும், அதேசமயம் அணியின் ஆலோசகராகவும் புதிய பதவி ஏற்றுள்ளார்.

அகமதாபாத் அணி மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக மூன்று வீரர்களை கைப்பற்றியுள்ளது. ஹர்திக் பாண்டியா ரஷித் கான் ஆகியோரை 15 கோடி ரூபாய்க்கும் சுப்மன் கில்லை 8 கோடி ரூபாய்க்கும் அந்த அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது உள்ள இந்திய அணியில் விளையாடி ஆக வேண்டும்

இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்று போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 1-2 என்கிற கணக்கில் தொடரை கைவிட்டது அதுமட்டுமல்லாமல் அதன் பின்னால் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரை 0-3 என்கிற கணக்கில் மாபெரும் தோல்வி அடைந்தது என இந்திய அணி தற்போது சறுக்கலான நிலையில் உள்ளது.

இது சம்பந்தமாக பேசி உள்ள கேரி கிறிஸ்டின் இந்திய அணியில் தற்போது ஒரு வீரர் விளையாடினால் நன்றாக இருக்கும். அகமதாபாத் அணி தேர்ந்தெடுத்துள்ள சுப்மன் கில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் என்றும், அவர் தான் தற்போது இந்திய அணியில் விளையாடி ஆக வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

“சுப்பன் கில் ஒரு அற்புதமான வீரர். என்னுடைய பார்வையில் அவர் இந்திய அணியில் விளையாடி ஆக வேண்டும். ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து அணியை வெற்றிபெற வைக்கும் விதத்தில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர் ஆவார். என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மேட்ச் வின்னர். எனவே கூடிய விரைவில் இந்திய அணியில் அவர் இடம் பெற்று விளையாடினால் நன்றாக இருக்கும்” என்று இவ்வாறு கேரி கிறிஸ்டின் சுப்மன் குறித்து கூறியுள்ளார்.