“இந்த வீரரை அழிக்காதிர்கள். தயவுசெய்து இதைச் செய்யாதிர்கள்” – ரோகித் சர்மாவுக்கு ஸ்ரீகாந்த் காட்டமான கோரிக்கை!

0
127
K srikanth

நவீன கிரிக்கெட் காலத்தில் மைதானங்களின் நாலா புறங்களிலும் பந்தை அடித்து நொறுக்கக் கூடிய 360 டிகிரி பேட்ஸ்மேன்களை எல்லா அணிகளுமே எதிர்பார்க்கின்றன. இப்படியான அதிரடி ஆட்டத்தை ஏ.பி.டிவிலியர்ஸ் அறிமுகப்படுத்தியதில் இருந்து, இந்த வகை அதிரடி ஆட்டம் அணி நிர்வாகத்தைத் தாண்டி, இரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்!

இந்த நிலையில்தான் இப்படாயான திறமையைக்கொண்ட பந்தை மைதானத்தின் எல்லாப் பக்கங்களிலும் விளாசக்கூடிய மும்பை மாநில வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்குக் கிடைத்தார். சூர்ய குமார் யாதவை இந்திய ஏ.பி.டிவிலியர்ஸ் என்று தாராளமாகக் கூறலாம்!

- Advertisement -

பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும், அவர் எப்படி வீசினாலும், தனக்கு விருப்பமான திசையில் பந்தை அடிக்க நேரத்தையும், உடலையும் வசதி செய்து ஆடக்கூடிய “ஷாட் கிரியேட்டர்” சூர்ய குமார் யாதவ்! அவரது பிளிக் ஷாட், ஸ்கூப் ஷாட்ஸ், ஸ்கூப் ஷாட்ஸ் அவ்வளவு திறமையாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். சர்வதேச போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸருக்கு பறக்க விட்டவர் சூர்யகுமார் யாதவ்!

இந்த அபார திறமை இவரை ஐபிஎல் தொடரின் நம்பர் 1 அணியான மும்பை அணியை வாங்க வைத்தது. இது மட்டும் அல்லாமல் இவரது தொடர் சிறப்பான செயல்பாடு, ஹர்திக் பாண்ட்யாவை வெளியிலீ விட்டு இவரை மும்பை அணி தக்க வைக்க வைத்தது. இது ஹர்திக் பாண்ட்யாவிற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாமென்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே கூறியிருந்தார்!

இப்படியான செயல்பாடுகளால் இந்திய அணிக்குள் வந்த சூர்ய குமார் யாதவ் வெள்ளைப்பந்து போட்டிகளில் குறிப்பாக டி20 போட்டிகளில் நம்பர் 4ல் இறங்கி சிறப்பாகி விளையாடி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 போட்டியில் நம்பர் 4ல் களமிறங்கி அதிரடி சதம் ஒன்றை விளாசி தள்ளியிருந்தார்!

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட்இன்டீஸ் டி20 தொடரில் திடீரென சூர்யகுமார் யாதவ் துவக்க வீரராக இரு ஆட்டங்களில் களமிறக்கப்பட்டு, இரு ஆட்டங்களிலும் 24, 11 ரன் என தோல்வியடைந்தார். இங்கிலாந்தில் டி20 தொடரில் துவக்ங ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்ட ரிஷாப் பண்ட்டையோ இல்லை வழக்கமான துவக்க ஆட்டக்காரர் இஷான் கிஷானையோ துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்காமல், சூர்யகுமாரை ஏன் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார்கள் என்று புரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகம்மத் கைப்பும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தற்போது, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது தேர்வுக்குழு தலைவராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்குக் காட்டமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்!

இதுபற்றி ஸ்ரீகாந்த் கூறுகையில் “சூர்ய குமார் யாதவ் நம்பர் 4ல் அற்புதமான வீரர். வரும் டி20 உலகக்கோப்பையிலும் அவர் நம்பர் 4ல் களமிறங்க வேண்டும். இப்படிப்பட்டவரை ஏன் ஓபன் பண்ண வைக்க வேண்டும்? வேண்டுமென்றால் ஸ்ரேயாஷையோ இல்லை இஷானையோ ஓபன் செய்ய வைக்கலாம். சூர்யகுமார் போன்ற ஒரு வீரரை அழிக்காதிர்கள். தயவுசெய்து இதைச் செய்யாதிர்கள். இரண்டு தோல்விகளுக்குப் பிறகு அவர் தன்னம்பிக்கையை இழந்து இருப்பார். கிரிக்கெட் நம்பிக்கை சார்ந்த விளையாட்டு” என்று விமர்சித்திருக்கிறார்!