ஐபிஎல் 2025

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் தேவையில்லாதது.. ஆர்சிபி அணி நிர்வாகத்துக்கு அவசரம் ஏன்? – மதன்லால் விமர்சனம்

நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் பெரிய துயரச் சம்பவம் நடந்தது நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் முதல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த மதன்லால் இந்த வெற்றி கொண்டாட்டம் அவசியமற்றது என விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற அடுத்த நாள் உடனே வெற்றி கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு சிறிய நகரம் என்பதாலும் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் உருவாகும் என்பதாலும், இதை இன்னும் கவனத்தோடு அணுகி இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இதற்கு என்ன அவசரம்?

இதுகுறித்து மதன்லால் பேசும் பொழுது “இந்த வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் இறந்தது மிகப்பெரிய துயரம் ஆகும். சரியான ஒரு துயர நிகழ்வு எப்பொழுதும் நடைபெற்ற இருக்கக் கூடாது. இது முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நாள் முன்னதாக செவ்வாய்க்கிழமை தான் உங்களுடைய வெற்றி கொண்டாட்டத்தை அகமதாபாத்தில் நடத்தினீர்கள். உடனடியாக நீங்கள் பெங்களூரில் செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?”

“இந்த வெற்றி கொண்டாட்டத்தை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நன்றாக திட்டமிட்டு பிறகு அறிவித்திருக்கலாம். இதற்கு உண்மையில் இன்னும் உற்சாகமாக ஆர்சிபி ரசிகர்கள் நிறைய பேர் வந்திருப்பார்கள். இப்படி தாமதமாக நடத்தியிருந்தால் இந்த மாதிரியான துயர சம்பவம் நடைபெற்று இருக்காது. ரசிகர்களும் நிறைய பேர் கலந்து கொண்டு இருந்திருப்பார்கள்”

- Advertisement -

ஆர்சிபி அணி நிர்வாகம் தான் பொறுப்பு

“இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை சொல்ல முடியாது. இதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து சரியான முறையில் பணியாற்றி இருக்க வேண்டும். உயிர்களை இழந்த குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது?”

இதையும் படிங்க : ஆர்சிபி அந்த வீரரை வாங்கி இருந்தா தோத்து போய் இருப்பாங்க.. ஏபி டிவில்லியர்ஸ் கருத்து.. அபினவ் முகுந்த் தகவல்

“இன்று இந்த வெற்றி கொண்டாட்டம் வீணானதாக பாழடிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அவசரமாக அந்த அணியை அழைத்துக் கொண்டு வந்து எந்த விழாவையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு நடுவில் ஒரு பெரிய தகவல் தொடர்பு இல்லாத பிழை ஏற்பட்டு இருக்கிறது. துரதிஷ்டவசமாக இங்கு தொடர்ந்து மனித உயிர்கள் மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Madan LalRCB