வம்பிழுக்கும் மைக்கேல் வாகன்.. கோலியை விட சிறந்தவரா ஜோ ரூட்.. புள்ளி விவரத்தை வைத்து சர்ச்சை பதிவு

0
29

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து அணி வீரரான ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் விராட் கோலியை வம்பு இழுக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 427 ரன்கள் குவித்தது.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் அற்புதமாக விளையாடி 206 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரிகளை விளாசிய நிலையில் 143 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் தரையோடு மட்டுமே அடித்து விளையாடி தனது கிளாஸ் ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக கருதப்படும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனன் தற்போது ஜோ ரூட் மற்றும் விராட் கோலி ஆகியோரின் டெஸ்ட் தொடரின் புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் “வணக்கம் இந்தியா” என்று குறிப்பிட்டு 191 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 8,848 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 29 சதங்களும் 30 அரை சதங்களும் அடங்கும். 254 அதிகபட்ச ரன்கள் உடன் டெஸ்டின் சராசரி ரன்களாக 49.15 வைத்திருக்கிறார்.

ஜோ ரூட் 263 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 12131 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 32 சதங்களும், 64 அரை சதங்களும் அடங்கும். 254 அதிகபட்ச ரன்கள் உடன் 50.33 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். விராட் கோலியை விட அதிக இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள நிலையில் கோலியை விட அதிக ரன்கள் குவித்தவராகவும், அதிக பேட்டிங் சராசரி வைத்திருப்பவராகவும் விளங்குகிறார்.

இதையும் படிங்க:கம்பீர் நான்காவதா ஒரு விஷயம் உங்ககிட்ட இல்ல.. ரெடி பண்ணலைனா ஆஸிகிட்ட சிக்குவிங்க – முன்னாள் பவுலிங் கோச் பேட்டி

இந்த நிலையில் மைக்கேல் வாகன் இருவரது புள்ளி விவரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது விராட் கோலியை வம்புக்கு இருப்பதாக அமைந்திருக்கிறது என்று ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -