ஓய்வை அறிவித்தாலும்.. அஸ்வின் இந்த விஷயத்துல தெளிவா இருக்காரு.. ஆனா பல பேர் பத்தி எதுவுமே தெரியாது – மைக்கேல் வாகன்

0
33

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல்வாகன் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஓய்வு முடிவை அறிவித்த அஸ்வின்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்காக தனது முத்திரையை பதித்து வந்தார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தார். இந்த சூழ்நிலையில் இளம் வீரர்களின் வருகையால் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இது பல முன்னாள் வீரர்களிடையே ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வந்தது. அஸ்வின் தனது ஓய்வை அறிவித்ததும் உடனடியாக சமூக வலைதளங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு கிரிக்கெட் தொடர்பான தகவல்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களிடையே மிக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த செயல் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வினின் பிரமாதமான யுக்தி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதில் இருந்து சமூக வலைதளங்களில் நல்ல நேரத்தை அனுபவித்து வருகிறார். அவர் நன்றாக விளையாடி முடித்து விட்டார். விளையாட்டை போதுமான அளவு விளையாடிய முடிக்கும் வீரர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு எங்கே செல்வார்கள் என்று தெரியாது. பெரிதாக அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதும் சமூக வலைதளங்கள் வழியாக தொடர்ந்து தனது வருகையை காட்டினார்.

இதையும் படிங்க:கம்பீர் சொல்றத பிளேயர்ஸ் கேட்க மாட்டாங்க.. இவர கோச்சா கொண்டு வாங்க – இங்கிலாந்து மான்டி பனேசர் கருத்து

ஆஸ்திரேலியா தொடருக்கான தனது பங்களிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று மைக்கல் வாகன் கூறியிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதற்கு முன்னரே தனது யூட்யூப் சேனலில் அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை பகிர்வது வழக்கம். எனவே கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு தற்போது சமூக வலைதளங்களில் முழு நேரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஐபிஎல் மற்றும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அஸ்வின் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -