சுப்மான் கில் இல்லை.. நான் இந்தியனா இருந்தால் இங்கிலாந்து தொடருக்கு இவர்தான் கேப்டன் – மைக்கேல் வாகன் பேட்டி

0
568

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் இருபதாம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தொடருக்கு பிசிசிஐ புதிய கேப்டனை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிசிசிஐ ஒரு புதிய இளம் கேப்டனை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் அது ரிஷப் பண்ட் அல்லது சுப்மான் கில் ஆகியோரில் ஒருவராக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகவும் இதற்கு பிசிசிஐ மறுக்க, டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இப்படி தற்போது இந்திய அணிக்குள் சில சிக்கல்கள் நிலவிக் கொண்டிருக்க இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இங்கிலாந்து தொடரின் கேப்டன் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

என் கேப்டன் இவர்தான்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் அதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல விரும்பினால் விராட் கோலி போன்ற ஒரு அனுபவ வீரர் தேவை என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஓய்வை அறிவிக்க முடிவு பண்ணிட்டா.. இந்த ஒரு சம்பவம் மட்டும் செஞ்சிட்டு போங்க.. விராட் கோலிக்கு முகமது கைஃப் வேண்டுகோள்

இது குறித்து அவர் கூறும்போது “நான் ஒருவேளை இந்தியனாக இருந்தால் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலிக்கு தான் கேப்டன் பதவியை வழங்குவேன். சுப்மான்கில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் துணைத் தலைவராக மட்டுமே இருக்க முடியும். எனவே அப்போது எனது முதல் தேர்வு விராட் கோலி ஆக மட்டுமே இருக்கும்” என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி போன்ற ஒரு ஆக்ரோஷமான, அனுபவமான வீரர் தேவை என்பதால் மைக்கேல் வாகன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -