சிஎஸ்கே இல்லை.. 2024ல் ரெய்னா இணையும் அணி.. மறைமுகமாக பெயரை சொன்ன சின்ன தல.. சோகம் கலந்த குஷியில் ஐபிஎல் ரசிகர்கள்

0
1218

2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக இன்று வரை அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். எத்தனையோ போட்டிகளில் தன்னந்தனியாக சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்தவர். அதேபோல் தல தோனியின் நிரந்தர தளபதி என்று ரெய்னாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அதன்பின் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்டதோடு, மீண்டும் ஏலத்திலும் வாங்கப்படவில்லை. அதன்பின் எந்த அணியின் ரெய்னாவை வாங்க முன் வரவில்லை.

- Advertisement -

என்னதான் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி புறக்கணித்தாலும், சுரேஷ் ரெய்னா ஒருபோதும் சிஎஸ்கே அணிக்கு எதிராக இல்லை. எப்போதெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் சென்னைக்கு வந்து ஆதரவளிப்பார். அதேபோல் சோசியல் மீடியாவிலும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணியின் ஆலோசகராக கடந்த 2 ஆண்டுகளில் கவுதம் கம்பீர் செயல்பட்டார். ஆனால் அவர் தற்போது கேகேஆர் அணிக்கு சென்றுள்ள நிலையில், லக்னோ அணியின் ஆலோசகர் பதவி காலியாக உள்ளது.

அந்த பதவிக்கு இந்திய முன்னாள் வீரரை நியமிக்க லக்னோ பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களை அடையாளம் காணவும் இந்திய வீரர்களுக்கான திட்டத்தை லாங்கருக்கு அளிக்கவும் இந்திய முன்னாள் வீரர்களை எல்எஸ்ஜி அணி அணுகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகமடைந்தனர். இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர், இது தவறான செய்தி என்று பதிவிட்டார்.

ஆனால் ட்விட்டரில் பத்திரிக்கையாளர் பதிவிட்ட இந்த ட்வீட்டிற்கு கீழ் சுரேஷ் ரெய்னா, நீங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்து நேரங்களில் உண்மையாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக புரிய வருகிறது. இருப்பினும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ரெய்னா களமிறங்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.