ஐபிஎல்

சிஎஸ்கே கேப்டன்ஷிப் சரியில்லை.. 5 முறை சாம்பியன் அணி இந்த மாதிரி நிச்சயம் இருக்காது – முன்னாள் சிஎஸ்கே வீரர் வருத்தம்

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சிஎஸ்கே கேப்டன் குறித்து சில கவலைகளை தெரிவித்து இருக்கிறார்.

ஐந்து முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம் எஸ் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதிலிருந்து சிஎஸ்கே மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போன சிஎஸ்கே கடந்த ஆண்டு பல வரலாற்றுத் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனவே இந்த ஆண்டு சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக பந்துகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து சரியான தொடக்கத்தை பெறாமல் தடுமாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து சில விஷயங்களை சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “சிஎஸ்கே கேப்டனை பொறுத்தவரை அவரது கேப்டன்ஷிப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கடந்த போட்டியில் அணியின் உற்சாகம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அவர் எடுக்கும் முடிவுகளும் கேள்விகளை ஏற்படுத்துகின்றன. மேலும் அவரது கேப்டன்சி சாதனைகள் சிறப்பாக இல்லை. அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டிலிருந்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக செயல்பட்டு ஜொலித்து வருகிறார். அவரது தலைமையில் இந்திய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி வருவதால் பஞ்சாப்டிங்ஸ் அணி தற்போது எண்ணேய் இடப்பட்ட இயந்திரம் போல நன்றாக இயங்கி வருகிறது. கடந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்கள். எனவே இவர்களை சிஎஸ்கே வீழ்த்த வேண்டும் என்றால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி இருக்கும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by