உம்ரான் மாலிக்கின் ஆட்டம் எனக்கு அந்த லெஜன்ட் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரை ஞாபகப்படுத்துகிறது – பிரெட் லீ

0
39

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டியில் மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி இருபத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருடைய பந்துவீச்சு எக்கானமி 9.03 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 13.57 ஆக உள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருகிற ஜூன் 9ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 டி20 போட்டி கொண்ட தொடரில் அவர் முதல் முறையாக இந்திய அணியில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு இவரது ஞாபகம்தான் வருகிறது

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ உம்ரான் மாலிக் குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அதி வேகமாக பந்து வீசி வருகிறார் அவரிடம் இன்னும் நிறைய ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் போல அவர் விளையாடுகிறார்.

இவருடைய ஆட்டத்தை பார்க்கையில் எனக்கு பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் தான் ஞாபகத்துக்கு வருகிறார். இவருடைய ஆட்டம் கிட்டத்தட்ட வக்கார் யூனிஸ் ஆட்டம் போலவே இருக்கிறது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளருடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிட்டு பிரெட் லீ பாராட்டிப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு சிறிய ஓய்வு தேவை

விராட் கோலியை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் மட்டுமே குவித்தார். மிக சுமாராகவே நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் அவர் விளையாடியதை சுட்டிக்காட்டிப் பேசிய பிரெட் லீ, “நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவர் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அப்பொழுது அவருக்கு சிறிய ஓய்வு தேவை. அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு ரிலாக்சாக மீண்டும் வரவேண்டும். அதன் பின்னர் அவர் கவனம் நிலையாக இருக்கும் அதே போல சில சதங்களையும் அவரிடமிருந்து நாம் பார்க்கலாம் என்று பிரெட் லீ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.