ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக இருக்க.. இந்த இந்திய வீரருக்கு மட்டுமே தகுதி இருக்கு.. மேத்யூ ஹெய்டன் பேட்டி

0
737

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியா அணி ஓமன் அணியை வீழ்த்தி புள்ளிகள் கணக்கை தொடங்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி மற்ற அணிகளை காட்டிலும் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. ஐபிஎல்லில் சென்னை, மும்பை அணிகளை போல சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்றாகும்.

- Advertisement -

இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அது மட்டுமில்லாமல் பெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன் டிராபி என அனைத்து தொடர்களிலும் சாம்பியன் அணியாக விளங்குகிறது. ஏற்கனவே டி20 உலக கோப்பையை ஒருமுறை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற இந்திய ஜாம்பவான்களை காட்டிலும் மகேந்திர சிங் தோனி ஒருவருக்கு மட்டுமே ஆஸ்திரேலியா அணியை வழிநடத்த தகுதி இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தி பேச மாட்டார் எனவும் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஆஸ்திரேலியாவின் டிரெஸ்ஸிங் ரூமில் தோனி எளிதாக உட்கார்ந்து கேப்டன்ஷிப் செய்ய முடியும். ஏனென்றால் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்பதை உறுதியாக நம்புகிறார். அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. தோனி எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவதை விரும்ப மாட்டார். தான் எந்த அளவிற்கு மகத்தானவன், தான் என்ன சாதித்தேன் என்பதை தோனி மற்றவர்களிடம் கூறி நீங்கள் பார்த்திருக்க முடியாது.

- Advertisement -

அதனாலேயே மகேந்திர சிங் தோனி மிகவும் முக்கிய வீரராக கருதப்படுகிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கிற 25 மில்லியன் மக்களை பாருங்கள். அவர்கள் எங்களுக்கு எதிராக எப்படி வெற்றிகளை பெற்றார்கள்? என்று கேட்பீர்கள். தோனி அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்துள்ளார். ஈகோ அல்லாத தன்னலமற்ற முறையில் தோனி செயல்படுகிறார். இந்தியாவின் சிறிய மூலையிலிருந்து வந்த மகேந்திர சிங் தோனி சென்னை மக்களின் இதயங்களை பிடிக்கும் வழியை கண்டறிந்துள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் சொன்ன புகார்.. ஐசிசி உடனடி நடவடிக்கை.. இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோபம்

எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கேப்டனாக தல தோனி இருக்கிறார். ஆனால் நாம் சொல்வது போல தோனி தன்னை பற்றி எப்போதும் நினைக்கவோ வெளியே சொல்லவும் மாட்டார். அதுதான் அவருடைய தனி சிறப்பம்சம் ஆகும். தோனி எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று கூறியிருக்கிறார். இந்தியாவின் அனைத்து ஐசிசி தொடர்களை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் மகேந்திர சிங் தோனி சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.