இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜேசன் கில்லஸ்பி மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்ள அதற்குப் பிறகு களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 49 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரப்பந்துவீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி வாஷிங்டன் சுந்தர் எதற்காக ஆறாவது இடத்தில் இறங்குகிறார் எனவும், அவர் அக்சார் பட்டேலுக்கு முன்னதாக களம் இறங்க வேண்டும் என சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார். மேலும் இந்திய அணி பேட்டிங் வரிசையில் வலிமையான அணி எனவும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஏன் வாஷிங்டன் சுந்தர் அக்சார் பட்டேலுக்கு கீழே பேட்டிங் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த 49 ரன்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் ஆஸ்திரேலியா வீரர்களால் மிரட்டப்படவில்லை. அவர் அதை ஆர்வமாக எதிர்கொண்டு விளையாட விரும்பினார். இந்திய அணி நல்ல பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. அந்த வரிசையில் அக்சார் பட்டேல் அவரது பேட்டிங் வரிசையில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அதிகமாக இருப்பது போல உணர்ந்தேன்.
இதையும் படிங்க:எங்க ஆளுங்களால வாஷிங்டன் சுந்தர மிரட்ட முடியல.. சென்னைலயே அந்த திறமையை பார்த்தேன் – ஜேசன் கில்லஸ்பி கருத்து
அவர் நல்ல வீரர் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் துணை கண்டங்களுக்கு அவர் பொருத்தமான வீரராக இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. நான் பயிற்சியாளராக இருந்தபோது சென்னையில் வாஷிங்டன் சுந்தரோடு நிறைய நேரம் செலவிட்டேன். அவருக்கு ஒரு சிறந்த அணுகுமுறை இருக்கிறது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் தன்னை ஆதரித்துக் கொள்கிறார்” என்று அவர் பேசி இருக்கிறார்.